முதல் பிரவசம் சிசேரியனா.? அடுத்தது சுகப் பிரவசம் தான்

Published By: Robert

18 Jul, 2017 | 12:34 PM
image

இரா­மேஸ்­வ­ரத்தில் இருந்து ஒரு பெண்­மணி அந்த மருத்­து­வரைப் பார்க்க சென்­னைக்கு வரு­கிறார்.  அவ­ருக்கு நீண்ட நாட்­க­ளாக குழந்தை இல்லை. அந்த  மருத்­துவர் சில ஆலோ­ச­னை­களை கூறவே அந்தப் பெண் நான்கு மாதத்தில் திரும்பி வந்து தான் கரு­வுற்­றி­ருப்­பதைச் சொல்லி நன்றி தெரி­விக்­கிறார். 

முதலில் அறு­வைச்­சி­கிச்சை மூலம் குழந்தை பெற்ற  பெண் இரண்டாம் முறை கரு­வுற்­றி­ருக்­கையில் அந்த மருத்­து­வ­ரிடம் ஆலோ­ச­னைக்கு வரு­கிறார். முதன் முறை அறு­வைச்­சி­கிச்சை நடந்­தி­ருந்­தாலும்  மறு­முறை  சுகப்­பி­ர­சவம்  சாத்­தி­யமே என்று தனது அனு­ப­வத்தில்  நிகழ்ந்த  சுகப்­பி­ர­சவக் கதை­களை  எடுத்துச் சொல்லி நம்­பிக்கை வார்த்­தைகள் கூறி அவரை அனுப்பி வைக்­கிறார். ஆறு­மாதம் கழித்து தனக்கு சுகப்­பி­ர­சவம் நிகழ்ந்­த­தற்கு நீங்கள்தான்  காரணம் எனக் கூறி நெகிழ்ச்­சி­யாகப் பேசு­கிறார். 

ஒரு பெண்­மணி அந்த மருத்­து­வ­ம­னையில் வந்து அனு­ம­திக்­கப்­ப­டு­கிறார். குறைந்த அளவே பணம் பெறும் மருத்­து­வ­ம­னை­யாக இருந்தும் இவரால் அதைச் செலுத்­து­வது மிகக் கடினம் என்­பதை   அறிந்து தனது கட்­டணம் மற்றும் தனது ஊழி­யர்­க­ளுக்­கான தொகையில் சிறி­த­ளவு குறைத்­துக்­கொண்டு பிர­சவம்  பார்த்து அனுப்­பு­கிறார். 

இப்­படி யார் உதவி என வந்து நின்­றாலும் அந்த மருத்­து­வரின் கண்­க­ளோடு இத­யமும் இள­கி­வி­டு­கி­றது. 

பெண் குழந்­தைகள் பிறந்த  போதி­லி­ருந்தே சரி­யான கவ­னிப்பும் அக்­க­றையும்  வேண்டும். சிறு வயதில் இருந்து ஊட்­டச்­சத்துக் குறை­பாடு இல்­லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். பெரிய பெண்­ணாகும் நேரத்தில் கூடுதல் கவ­னிப்பு அவ­சியம். ஒரு குழந்­தையைத் தாங்கும்  கருப்­பை­யா­னது மிகவும் வலி­மை­யு­டை­ய­தாக இருப்­ப­தற்கும், இடுப்­பெ­லும்பு விறைப்புத் தன்­மை­யோடு இல்­லாமல் தளர்வுத் தன்­மை­யோடு  இருப்­ப­தற்கும் உடற்­ப­யிற்­சியும் அவ­சியம் செய்­தாக வேண்டும். தனி­யாக உடற்­ப­யிற்சி என்­றில்­லாமல் வீட்டு வேலை­களைச் செய்­தாலே போது­மா­னது. இன்று எல்­லா­வற்­றுக்கும் கரு­விகள்  வந்­து­விட்­ட­தால்தான் கரு­வி­லேயே பிரச்­சி­னைகள் ஆரம்­பித்­து­வி­டு­கி­றது. 

அதேபோல்  மனதைத் தூய்­மை­யாக வைத்துக் கொள்ள வேண்டும். கெட்ட எண்­ணங்­களோ, எதிர்­மறை சிந்­த­னை­களோ இல்­லாமல் இருப்­பது மிக அவ­சியம். முதன் முறை சிசே­ரியன் ஆனாலும் அடுத்த  முறை சுகப்­பி­ர­ச­வ­மாக வாய்ப்­புகள் உண்டு. இன்று  பல மருத்­து­வ­ம­னை­களில் அறுவை சிகிச்­சைக்குப் பின் சுகப்­பி­ர­சவம் என்­பதை ஏற்­றுக்­கொள்ள. மறுக்­கின்­றனர். இலட்­சத்தில் ஒரு பெண்­ணுக்­குத்தான் இரண்டாம் முறை சுகப்­பி­ர­ச­வத்தில் பிரச்­சினை வரக்­கூடும். இரண்டாம் பிர­ச­வத்தை எதிர்­கொள்ளும் அத்­தனை பெண்­க­ளுக்கும் மீண்டும் அறுவை சிகிச்சை  செய்­யப்­ப­டு­கி­றது. இதற்கு கருவுற்ற பெண்களே  காரணமாக இருக்கின்றனர். 

அதனால் குடும்பத்தில் இருப்பவர்களும், மருத்துவரும் இணைந்து சுகப்பிரசவத்துக்கான  வழிகளைப் பின்பற்ற கருவுற்ற பெண்ணுக்கு  நம்பிக்கையை அளிக்க வேண்டும்  என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஹண்டிங்டன்ஸ் நோய் பாதிப்பிற்குரிய நவீன சிகிச்சை

2024-03-26 16:32:47
news-image

இடியோபதிக் பல்மனோரி ஃபைப்ரோசிஸ் எனும் நுரையீரல்...

2024-03-24 21:02:07
news-image

அர்த்ரால்ஜியா எனும் மூட்டு வலி பாதிப்பிற்குரிய...

2024-03-20 21:20:55
news-image

செபோர்ஹெக் கெரடோசிஸ் எனும் தோல் பாதிப்பிற்குரிய...

2024-03-20 09:17:28
news-image

குரல்வளை வீக்கம் : நவீன சிகிச்சை

2024-03-18 18:23:28
news-image

ஆர்டியோஸ்கிளிரோஸிஸ் ரெட்டினோபதி எனும் விழித்திரை பாதிப்பிற்குரிய...

2024-03-16 14:38:19
news-image

உள்காது பாதிப்புகளை கண்டறிவதற்கான நவீன பரிசோதனைகள்

2024-03-15 18:16:00
news-image

பெருங்குடல் வீக்கமும் நவீன சிகிச்சையும் 

2024-03-14 16:20:48
news-image

சிறுநீரக ஆரோக்கியம், அதன் பாதுகாப்பை உறுதிப்படுத்துவோம்!...

2024-03-14 15:59:51
news-image

ஆசனவாய் புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணமளிக்கும் சத்திர...

2024-03-13 22:50:05
news-image

மயோகார்டிடிஸ் எனும் இதய தசையில் ஏற்படும்...

2024-03-08 17:40:06
news-image

நான் ஆல்கஹாலிக் ஃபேட்டி லிவர் எனும்...

2024-03-07 13:48:04