பெண்­களில் கர்ப்­பப்பை மற்றும் சூலகக் கட்­டி­களை தோற்­று­விக்கும் கார­ணிகள்

Published By: Robert

18 Jul, 2017 | 12:37 PM
image

பெண்­களின் கர்ப்­பப்­பையில் ஏற்­ப­டக்­கூ­டிய பைபு­ரோயிட் கட்­டி­களும், சூல­கத்தில் ஏற்­ப­டக்­கூ­டிய ஓவ­ரியன் சிஸ்ட் (Ovarian cyst) சூலகக் கட்­டி­களும் இன்று பலரும் அறிந்த கூடு­த­லான பெண்­களில் காணப்­ப­டக்­கூ­டிய பொது­வான பிரச்­சி­னை­யா­க­வுள்­ளது. 

தற்­போது பெண்கள் பரு­வ­ம­டைந்த வய­தி­லி­ருந்து மாத­விடாய் நின்­று­போகக் கூடிய மெனோபோஸ் பருவ வய­துவரை இவ்­வா­றான கட்­டி­களை கண்­ட­றியும்  கால­மாக உள்­ளது. 

இவ்­வா­றான கட்­டிகள் கண்­ட­றி­யப்­பட்­டதும் அது தொடர்­பாக சம்­பந்­தப்­பட்ட பெண்­ணிற்கும், அவ­ருடன் தொடர்­பு­டைய குடும்­பத்­த­வர்­க­ளுக்கும் பல்­வேறு கேள்­வி­களும், சந்­தே­கங்­களும் எழு­வது வழமை. இவ்­வா­றான கட்­டிகள் ஏன் ஏற்­பட்­டன என்­பதும் அவற்றை என்ன வழியில் குணப்­ப­டுத்­தலாம் என்­பதும் அவற்­றினால் ஏற்­ப­டக்­கூ­டிய பாதிப்­புகள் எவை என்­ப­னவும் சந்­தே­கங்­க­ளாகும்.

இவ்­வா­றான சந்­தே­கங்­க­ளுக்கு தகுந்த விளக்­க­ம­ளித்து தீர்த்து வைப்­பது எமது கட­மை­யாகும்.

கர்ப்­பப்­பையில் / சூல­கத்தில் கட்­டிகள் தோன்­று­வ­தற்­கான கார­ணங்கள்:

கர்ப்­பப்­பை­யிலோ சூல­கத்­திலோ தோன்றும் கட்­டிகள் ஏன் ஏற்­பட்­டன எனக் கேட்டால் சரி­யான விடை காண முடி­யாது. ஏனெனில் இவ்­வா­றான கட்­டிகள் பெண்­களின் தனிப்­பட்ட பரம்­பரை இயல்­புகள் கார­ண­மா­கவே தோன்­று­கின்­றன. 

இவை உட்­கொள்ளும் உணவு வகை­க­ளாலோ அல்­லது மருந்து வகை­க­ளாலோ ஏற்­ப­டு­வ­தில்லை. ஆனால் பைபு­ரோயிட் கட்­டிகள் கூடு­த­லாக மணம் முடிக்கத் தாம­த­மாகும் 40 வய­திற்கு மேற்­பட்ட பெண்­க­ளிலும் மணம் முடித்தும் குழந்தைப் பாக்­கியம் தாம­த­ம­டையும் பெண்­க­ளிலும் 40 வய­திற்கு மேல் தோன்­று­கின்­றது

இதி­லி­ருந்து பார்க்­கும்­போது தொடர்ச்­சி­யான ஹோர்­மோன்­களின் தூண்­டு­தலும் இவை ஏற்­படக் கார­ண­மாகும். எப்­ப­டி­யா­யினும் பைபு­ரோயிட் கட்­டி­களோ, சூலகக் கட்­டி­களோ ஏற்­ப­டு­வதை பெண்­க­ளாலோ, மருத்­து­வர்­க­ளாலோ தடுக்க முடி­யாது. ஆனால் ஒழுங்­கான ஆரம்ப பரி­சோ­தனை மூலம் அவற்றை ஆரம்­பத்தில் கண்­ட­றிந்து சரி­யான சிகிச்­சைகள் எடுப்­பதே சிறந்த வழி­யாகும்.

கர்ப்­பப்பை மற்றும் சூலகக் கட்­டி­களை கண்­ட­றியும் பரி­சோ­த­னைகள்

பெண்­களில் ஒழுங்­கற்ற மாத­விடாய் போக்கு, மாத­வி­டா­யின்­போது அடி­வ­யிற்­று­வலி, மாத­விடாய் காலத்தில் அதி­க­ள­வான குருதிப் போக்கு, திரு­ம­ண­மான பெண்­களில் நீண்­ட­காலம் குழந்தைப் பாக்­கியம் தாம­த­ம­டைதல் போன்ற ஏதா­வது கார­ணங்­க­ளுக்கு வயிற்றை அமத்திப் பார்த்து கட்டித் தன்­மை­யையும் வைத்து ஓர­ளவு எம்மால் கட்­டிகள் இருக்­கலாம் என சந்­தே­கித்தால் ஸ்கான் பரி­சோ­தனை ஒன்றின் மூலம் இதனை உறு­திப்­ப­டுத்­தலாம். ஸ்கான் பரி­சோ­த­னையில் பல வகைகள் உண்டு. அவற்றில் U.S. ஸ்கான் (Ultra Sound Scan) CT ஸ்கான், MRI ஸ்கான் போன்­ற­வற்றின் மூலம் இவ்­வா­றான கட்­டி­களை கண்­ட­றிய முடியும். இதில் மிகவும் எளி­மை­யா­னதும் இலா­ப­க­ர­மா­னதும் ஆன ஸ்கான் US ஸ்கான் ஆகும். எனினும் சில சந்­தர்ப்­பங்­களில் CT ஸ்கான், MRI ஸ்கான் உத­விகள் தேவைப்­படும்.

ஸ்கான் பரி­சோ­தனை மூலம் கட்­டியை உறு­திப்­ப­டுத்­திய பின்னர் அவை எந்­த­ளவு ஆபத்­தா­னவை என்­பதை அறிய இரத்தப் பரி­சோ­த­னைகள் சில செய்ய வேண்டும். இதனை CA-125 என்ற இரத்தப் பரி­சோ­தனை பெறு­பே­று­களை வைத்து கட்­டியின் வகை­யையும் அதன் தீவிர தன்­மை­யையும் அறிந்து கொள்ள முடியும்.

கர்ப்­பப்பை கட்­டிகள் கண்­ட­றி­யப்­பட்டால் மேற்­கொள்ள வேண்­டிய சிகிச்­சைகள்:

கர்ப்­பப்­பை­யிலோ சூல­கத்­திலோ கட்­டிகள் இருப்­பது அறிந்­ததும் பெண்கள் மனதில் தோன்றும் முதல் கேள்வி, இதனைக் கரைக்க மருந்­துகள் உண்டா? என்­ப­தாகும். பைபு­ரோயிட் கட்­டி­களை மருந்­துகள் மூலம் கரைக்க முடி­யாது. 

எனினும் Garh என்ற ஊசி மூலம் இக் கட்­டிகள் தற்­கா­லி­க­மாக சுருங்க வைக்­கப்­பட்­டாலும் சிறிது காலத்தின் பின் மீண்டும் பழைய பரு­ம­னுக்கு வள­ரக்­கூடும். ஆகையால் ஊசி மூலம் கட்­டி­க­ளுக்கு வழங்­கப்­படும் சிகிச்­சைகள் பெரிய அளவில் வெற்­றி­ய­ளிக்கும் எனக் கூற முடி­யாது. அது­போ­லவே சூலகக் கட்­டி­க­ளுக்கும் ஊசி மூல­மான சிகிச்­சைகள் வெற்­றி­ய­ளிப்­பது குறைவு.

கர்ப்­பப்பை கட்­டி­க­ளுக்கு சத்­திர சிகிச்சை அவ­சியம் தானா?

கர்ப்­பப்பைக் கட்­டி­க­ளுக்கோ, சூலகக் கட்­டி­க­ளுக்கோ அவற்றை கண்­ட­றிந்­ததும் அடுத்­தது சத்­திர சிகிச்சை தான் என நினைக்க வேண்டாம். கட்­டிகள் உள்ள எல்­லோ­ருக்கும் சத்­திர சிகிச்­சைதான் கட்­டாயம் செய்ய வேண்­டு­மென்­ப­தில்லை. அதா­வது கட்­டி­களின் பருமன், அதன் நோய் அறி­கு­றி­களின் தீவிரம் மற்றும் இரத்தப் பரி­சோ­த­னையின் பெறு­பே­று­களின் அள­வுகள், குழந்தைப் பாக்­கி­யத்தின் தேவைகள், பெண்­களின் தனிப்­பட்ட விருப்பு வெறுப்­புகள் என பல விட­யங்­களை கருத்திற் கொண்டு சத்­திர சிகிச்சை ஒன்று தீர்­மா­னிக்­கப்­ப­டு­கின்­றது. அதா­வது உடனே சத்­திர சிகிச்சை செய்­வது அவ­சி­யமா அல்­லது சிறிது காலம் பொறுத்­தி­ருந்து பார்க்­க­லாமா? என முடிவு செய்­யலாம். 

குழந்தைப் பாக்­கியம் தாம­த­ம­டையும் ஒரு பெண்ணில் இவ்­வா­றான கர்ப்­பப்பை கட்­டிகள், கண்­ட­றி­யப்­பட்டால் அவை சிகிச்­சைக்கு உட்­ப­டுத்­தப்­பட வேண்­டிய கட்­டி­களா என முதலில் அறிய வேண்டும். ஏனெனில் சில கட்­டி­க­ளுக்கு சிகிச்­சைகள் அவ­சி­ய­மில்லை.

இந்த கட்­டி­களை மருந்­துகள் மூலம் குண­மாக்க முடி­யாது. சத்­திர சிகிச்­சைகள் மூலமே அகற்ற வேண்டும். இவ்­வாறு பைபு­ரோயிட் கட்­டிகள் உள்­ள­போது சத்­திர சிகிச்சை அவ­சி­யமா என கட்­டியின் பருமன் அது கர்ப்­பப்­பை­யினுள் அமைந்­துள்ள இடம் என்­ப­வற்றை வைத்தே சத்­திர சிகிச்சை தீர்­மா­னிக்­கப்­படும்.

அவ­சி­ய­மற்ற கட்­டி­க­ளுக்கு சத்­திர சிகிச்சை மேற்கொண்டால் அதனால் தீமையே ஏற்படும். எனவே குழந்தைப் பாக்கியம் தாமதமடையும் பெண்களில் பைபுரோயிட் கட்டிகளுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளும் போது அது அவசியமானதுதான் என்றாலேயே மேற்கொள்ள வேண்டும்.

எனவே நேயர்களே கர்ப்பப்பை சூலகக் கட்டிகள் தற்போது ஒரு சகஜமான விடயமாகவே உள்ளது. இவற்றுக்கு சத்திர சிகிச்சைதான் அவசியம் என்றில்லை. இக் கட்டிகள் புற்றுநோய் தொடர்புள்ளவை என்றுமில்லை. 

பல காரணிகளை கலந்தாலோசித்து விருப்பு வெறுப்பிற்கு ஏற்றவாறு உங்களது மருத்துவரின் ஆலோசனைப்படி சிகிச்சைகளை தீர்மானிப்பதே சிறந்த வழி.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நுரையீரல் உயர் குருதி அழுத்த பாதிப்பிற்குரிய...

2024-04-16 17:40:01
news-image

ஓடிடிஸ் மீடியா எனும் நடு காதில்...

2024-04-15 16:27:12
news-image

சிஸ்டிக் ஃபைப்ரோசிஸ் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-15 02:57:12
news-image

ஹீட் ஸ்ட்ரோக் எனும் பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-04-12 01:31:06
news-image

பிறவி அட்ரீனல் ஹைப்பர்பிளேசியா எனும் சுரப்பியில்...

2024-04-10 22:59:16
news-image

ரூமாடிக் ஹார்ட் டிஸீஸ் எனும் இதய...

2024-04-09 17:25:41
news-image

யாழில் புற்றுநோய் அதிகரிப்பு ! கடந்த...

2024-04-09 09:37:01
news-image

கை நடுக்கம் எனும் பாதிப்பிற்குரிய நவீன...

2024-04-08 18:33:54
news-image

உலக ஆரோக்கிய தினத்தில் உறுதி கொள்வோம்!

2024-04-08 10:00:07
news-image

டெஸ்டிகுலர் கேன்சர் எனும் விரைசிரை புற்றுநோய்...

2024-04-05 20:56:29
news-image

ஒஸ்பெர்ஜர்'ஸ் சிண்ட்ரோம் எனும் குழந்தைகளுக்கான வளர்ச்சி...

2024-04-04 14:17:36
news-image

அதிரோஸ்கிளிரோசிஸ் எனும் ரத்த நாளத் தடிப்பு...

2024-04-03 16:12:32