ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகத்தின் அரசியல் விவகாரங்களுக்கான செயலாளர் ஜெப்ரி பெல்ட்மன் நாளை புதன்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை கொழும்பில் தங்கியிருக்கும் அவர் சமாதான அபிவிருத்தி தொடர்பில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளார்.

அத்துடன் தனது விஜயத்தின்போது அரச உயர்மட்டக்குழுவினரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் உள்ளிட்ட பிரதிநிதிகளையும் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.

கிழக்கு மாகாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள அவர் அங்குள்ள முக்கிய பிரதிநிதிகளை சந்திக்கவுள்ளதுடன் சிவில் அமைப்புகள் மற்றும் சமயத் தலைவர்களையும் சந்திக்கவுள்ளதாக தெரியவருகிறது.