டிசம்பர் மாதத்­துக்கு முன்னர் சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்­தை­விட்டு செல்­வார்கள் என்ற அச்சம் ஜனா­தி­ப­திக்கு இருக்­கின்­றது. அத­னால்தான் டிசம்பர் 31வரை பொறுத்­தி­ருக்­கு­மாறு தெரி­வித்­துள்ளார் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் சந்­தி­ர­சிறி கஜ­தீர பரிகசித்தார். சோச­லிஷ மக்கள் முன்­னணி நேற்று கொழும்பில் நடத்­திய செய்­தி­யாளர் சந்­திப்பில் கலந்­து­கொண்டு கருத்துத் தெரி­விக்­கை­யி­லேயே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு தொடர்ந்தும் கூறு­கையில்,

டிசம்பர் 31 வரை சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் தன்­னுடன் இருக்­க­வேண்டும் என ஜனா­தி­பதி தெரி­வித்­துள்­ளதன் மூலம் பாரா­ளு­மன்­றத்­துக்குள் பிரச்­சினை இருப்­பதை ஜனா­தி­பதி தெரிந்­து­ கொண்­டுள்ளார். அத்­துடன் டிசம்பர் மாதத்­துக்கு முன்னர் சுதந்­திரக் கட்சி உறுப்­பி­னர்கள் அர­சாங்­கத்­தை­விட்டு செல்வார்கள் என்ற அச்சம் ஜனா­தி­ப­திக்கு இருக்­கின்­றது. அத­னால்தான் டிசம்பர் 31 வரை பொறுத்­தி­ருக்­கு­மாறு தெரி­வித்­துள்ளார்.

அத்­துடன் இரண்டு கொள்­கைகள் உடைய கட்­சிகள் ஒன்­றி­ணைந்து அர­சாங்கம் ஒன்றை கொண்­டு­ செல்ல முடி­யாது என நாங்கள் ஆரம்

பம் முதல் தெரி­வித்து வரு­கின்றோம். அத­னால்தான் மிகவும் திட்­ட­மிட்ட முறையில் அர­சாங்கம் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை பிற்­ப­டுத்­தி­வ­ரு­கின்­றது. அத்­துடன் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்தல் தொடர்­பான சட்­ட­மூலம் பாரா­ளு­மன்­றத்­துக்கு சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ள­போதும் அது தொடர்­பாக விவாதம் நடத்­தாமல் அர­சாங்கம் பல்­வேறு கார­ணங்­களை தெரி­வித்து வரு­கின்­றது.

மேலும் பாரா­ளு­மன்­றத்­தை­விட மக்கள் உள்­ளூ­ராட்சி மன்­றங்­க­ளு­டனே நெருக்­க­மாக இருக்­கின்­றனர். உள்­ளூ­ராட்சி மன்ற தேர்­தலை நடத்­தாமல் இருப்­பது மக்­களின் அடிப்­படை ஜன­நா­யக உரி­மையை மீறு­வ­தாகும்.  அர­சாங்கம் உரிய காலப்­ப­குதியில் உள்­ளூ­ராட்சி மன்றத் தேர்­தலை நடத்­தி­யி­ருந்தால் டெங்கு நோய் இந்­த­ளவு பரவி இருக்­காது. இதற்கு முன்­னரும் நாட்டில் டெங்கு, மலே­ரியா போன்ற நோய்கள் இருந்­தன. அதற்கு நாங்கள் முகம்­கொ­டுத்து  இந்­த­ளவு பெரு­காமல் கட்­டுப்­ப­டுத்­தி­யுள்ளோம்.

அத்­துடன் அர­சாங்கம் மக்­களின் எந்த பிரச்­சி­னைக்கும் இது­வரை தீர்வு காண­வில்லை. சைட்டம் அர­சு­ட­மை­யாக்­கப்­ப­டு­வதன் மூலம் தனியார் மருத்­துவ பீடம் ஆரம்­பிப்பது தொடர்­பான பிரச்­சி­னைக்கு தீர்­வா­கப்­போ­வ­தில்லை. அதே­போன்று விவ­சா­யிகள் தற்போது வீதிக்­கி­றங்கி ஆர்ப்­பாட்டம் செய்ய ஆரம்­பித்­துள்­ளனர். அர­சாங்­கத்தின் இய­லா ­மையே இதற்கு கார­ண­மாகும். அர­சாங்கத் தின் மீது மக்­க­ளுக்கு நம்­பிக்கை இல்­லாமல் போயுள்­ளது. மக்­க­ளுக்கு வாழ முடி­யாத அள­வுக்கு பொரு­ளா­தார பிரச்­சினை ஏற்­பட்­டுள்ளது. ஆனால் இவற்­றுக்கு தீர்­வு­ காண்­ப­தற்கு அர­சாங்­கத்­திடம் மாற்­று­வழி இல்லை. 

எனவே மக்கள் மய­மான அர­சாங்கம் ஒன்று அமையும் வரைக்கும் இந்த பிரச்சினைகளில் இருந்து எங்களுக்கு மீள முடியாது. அத்துடன் எந்த அரசாங்கம் வந்தாலும் தனவந்த பொருளாதார கொள்கைக்கே ஆதரவளித்து வருகின்றது. அதனால் இடதுசாரி கொள்கையுடைய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கு முயற்சித்து வருகின்றோம் என்றார்.