இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் வருகின்ற வாரத்துடன் முடிவடைகின்றமையால்,புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று இடம்பெற்றது.

பாரதிய ஜனதா கூட்டணி சார்பில் ராம்நாத் கோவிந்தும், எதிர்க் கட்சிகள் சார்பில் முன்னாள் சபாநாயகர் மீராகுமாரும் ஜனாதிபதி வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர். 

இந்நிலையில் இன்று காலை 10 மணிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஆரம்பமாகி மாலை 5 மணியுடன் முடிவடைந்தது.டெல்லியில் பாராளுமன்ற வளாகம், தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள சட்டசபை வளாகம், இதேபோல் பிற மாநிலங்களில் உள்ள சட்டசபை வளாகங்கள் என மொத்தம் 32 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டிருந்தது.

ஜனாதிபதி தேர்தல் முடிவுகள் வரும் 20 ஆம் திகதி வெளியாகும். வெற்றி பெறும் வேட்பாளர் புதிய ஜனாதிபதியாக 25-ஆம் திகதி பதவி ஏற்பார் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.