பிரித்தானியாவின் வடமேற்கு பகுதியிலுள்ள ஸ்டன்மோர் பகுதியில் தமிழ் குடும்பம் ஒன்றின் மீது மர்ம நபர்கள் தாக்குதல் நடாத்தியுள்ளனர்.

அத்துமீறி வீட்டினுள் புகுந்த மர்ம நபர்கள் 40 வயது மதிக்கத்தக்க பெண்ணையும் அவரது தாயாரையும் தாக்கி விட்டு தப்பிச்சென்றுள்ளனர்.

தாக்குதல் நடத்தியவர்கள் கறுப்பின இளைஞர்கள் என்று பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையின் போது தெரியவந்துள்ளது.

இச் சம்பவம் தொடர்பாக பிரித்தானியப் பொலிஸார் 23 வயது மதிக்கத்தக்க இளைஞனை கைது செய்துள்ளதோடு மேலதிக விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.