வீரகெட்டிய பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்துக்கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார்  தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் இன்று அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றுள்ளது.

மண்டாடுவ பகுதியில் நேற்றிரவு இடம்பெற்ற இசை நிகழ்ச்சியொன்றுக்கு சென்றுவிட்டு வீடுதிரும்புகையிலேயே இக் கொலைச் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

கொலைசெய்யப்பட்டவர் தங்காலை - பஹலகொடுவ பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய இளைஞர் எனவும் பிரேத பரிசோதனைக்காக சடலம் ஹம்பாந்தோட்டை வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கும் பொலிஸார், இளைஞனை கொலை செய்த சந்தேகநபர்களை கைதுசெய்வதற்கான நடவடிக்கையில் ஈடுபட்டுவருகின்றனர்.