தனது கதவுகளை கொழும்பு வாடிக்கையாளர்களிற்கு சமீபத்தில் திறந்த Urban Trendz ஆனது இலங்கையின் புதிய, மிகவும் நவீன பாணியிலான பிராண்டுகள் பலவற்றை உள்ளடக்கியுள்ளதுடன் United Colors of Benetton, AND, Global Desi, Allen Solly, Van Heusen, V.Dot, John Miller, Indigo Nation, Scullers, Jealous 21, Victorinox, Swiss Gear, Baggit, Breakbounce, Killer-Jeans, FabAlley, British Cosmetics, Lakme, Amante, Triumph மற்றும் Jockey உள்ளாடைகள், RLJ தங்க ஆபரணங்கள் மற்றும் GMT கடிகாரங்கள் போன்ற பிரத்தியேகமான ஃபேஷன் பிராண்டுகளின் சிறந்த வகைப்படுத்தலுடனான நிலையமாக காணப்படுகின்றது.

கொழும்பு பிரதேசத்தில் சமீபத்திய பரவலான பிராண்டுகளை ஒரே கூரையின் கீழ் காட்சிப்படுத்தும் ஒரே நிலையமும் இதுவேயாகும். பல புகழ்பெற்ற ஃபேஷன் துணை உபகரண பிராண்டுகள் உள்ளடங்கலாக ஃபேஷன் வகைகளான ஆடைகள் மற்றும் உள்ளாடைகள், லக்கேஜ்கள் மற்றும் பயணத்துணைப் பொருட்கள், கைக்கடிகாரங்கள், ஆபரணங்கள் மற்றும் அழகுசாதன பொருட்கள் என்பவற்றை கொண்ட இந்த தொகுப்புக்கள் பரந்த அளவிலானதாக கருதப்படுவதுடன் இவையனைத்தும் நகர்ப்புற மற்றும் புறநகர் வாடிக்கையாளர்களை மனதிற் கொண்டே விலைப்பட்டியலிடப்பட்டுள்ளது. 

புகழ்பெற்ற இவ் ஆடை பிராண்டுகள் அனைத்தும் ஐரோப்பியாவிலிருந்து தோன்றியுள்ளதுடன் சர்வதேச அளவில் நற்பெயருடைய லக்கேஜ்கள் மற்றும் பயணத்துணைப் பொருட்கள் என்பன சுவிற்சிலாந்து நாட்டிலிருந்து வருபவையாகும். Victorinox, Hugo Boss, Lacoste, Ferrari, Timberland, Police, Gant, Swiss Military Hanowa, Raymond Weil, 88 Rue Du Rhone, Earnshaw, James McCabe, AVI-8, Maserati, Lee, Sector மற்றும் Pepe Jeans போன்ற உலகளாவிய புகழ்பெற்ற பிராண்டு கடிகாரங்களின் பரந்த மற்றும் பிரத்தியேக வரிசையை GMT நாமத்தின் கீழ் UrbanTrendz இல் வாடிக்கையாளர்கள் பெற்றுக்கொள்ளலாம்.

Royal Lanka Agencies மூலமாக முன்னெடுக்கப்படும் மற்றுமொரு சில்லறை வியாபார முயற்சியாக காணப்படும் UrbanTrendz, மலிவான விலையில் பல பிராண்டுகளை பெற்றுக் கொள்ளும் ஒரு களத்தை உருவாக்கும் கருத்தையே வலியுறுத்துகின்றது. இந்த அதி நவீன சில்லறைக் கடையானதுரூபவ் டிசைனர் ஃபேஷன் மற்றும் கவர்ச்சியான நுகர்வோர் போக்குகளை தன்னகத்தே கொண்டுவருவதுடன் சர்வதேச தரத்திற்கு இணங்க முழு சில்லறை அனுபவத்தை வழங்கும் வகையில் வடிவமைக்கப்பட்ட சமீபத்திய ஸ்டோர் ஸோனிங்-வழியமைப்பைக் கொண்டுள்ளது. 

புகழ்பெற்ற பிராண்டுகளிலிருந்து வரும் ஆடைகள் மற்றும் உள்ளாடைகள்ரூபவ் லக்கேஜ்கள் மற்றும் பயணத்துணைப் பொருட்கள், கைக்கடிகாரங்கள், ஆபரணங்கள், அழகுசாதன பொருட்கள் மற்றும் ஃபேஷன் அணிகலன்கள் என்பவற்றை கொண்ட இந்த பரந்தளவிலான தொகுப்புக்களாவனரூபவ் தங்களது ஃபேஷன் பாணிகளை வெளிப்படுத்த விரும்பும் வாடிக்கையாளர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய தயாராக மற்றும் ஏற்றதாக UrbanTrendz காணப்படுகின்றது எனும் கருத்தை வலியுறுத்துகின்றன.