கொழும்பு கோட்டையிலிருந்து தலைமன்னார் வரையிலான ரயில் போக்குவரத்து இன்று முதல் மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக ரயில் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார். 

Image result for ரயில் போக்குவரத்து virakesari

ரயில் பாதையில் மேற்கொள்ளப்படும் திருத்தப் பணிகள் காரணமாகவே போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

மதவச்சிய மற்றும் செட்டிகுளம் பிரதேசத்திலுள்ள பழைய பாலத்தை அகற்றி புதுப் பாலம் அமைக்கும் வேலைத்திட்டத்திற்காகவே போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது. எனினும் எதிர்வரும் 23 ஆம் திகதி குறித்த திருத்தப் பணிகள் நிறைவடையவுள்ளது. எனவே எதிர்வரும் 24 ஆம் திகதி மீண்டும் வழமைபோல் ரயில் போக்குவரத்து இடம்பெறவுள்ளது.

ரயில் போக்குவரத்து மட்டுப்படுத்தப்படும் குறித்த காலப்பகுதியில் கொழும்பு கோட்டையிலிருந்து மதவச்சிய வரையில் ரயில் போக்குவரத்து இடம்பெறவுள்ளதுடன் மதவச்சியிலிருந்து தலைமன்னார் வரையில் விசேட பஸ் போக்குவரத்து இடம்பெறவுள்ளதாகவும் ரயில் போக்குவரத்து அதிகாரி விஜய சமரசிங்க தெரிவித்துள்ளார்.