(எம்.ஆா்.எம்.வஸீம்)

தேர்தலை பிற்படுத்தும் திட்டத்திலே அரசியல் கட்சிகளுக்கிடையில் அலரி மாளிகையில் கலந்துரையாடல் இடம்பெற்றது. அதில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்கே கூட்டு எதிர்க்கட்சி கலந்துகொள்ளவில்லை. அத்துடன் தொடர்ந்து தேர்தல்கள் பிற்படுத்தப்படுமானால் தேர்தல்கள் ஆணைக்குழு நூதனசாலையாக மாறும் நிலையே ஏற்படும் என ஜனநாயக இடதுசாரி கட்சியின் செயலாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான வாசுதேவ நாணயக்கார தெரிவித்தார்.

Image result for வாசுதேவ நாணயக்கார  virakesari

சோசலிச மக்கள் முன்னணி இன்று கொழும்பில் நடத்திய செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.