இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் லூதியானாவில் கிறிஸ்தவ மதபோதகர் ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார்.

இவ்வாறு சுட்டுக்கொல்லப்பட்டவர் 50 வயதுடைய சுல்தான் மாஷிஹ் என இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

 அவரது கிறிஸ்தவ ஆலயத்திற்கு அருகில் நின்ற வேளை, மோட்டார் சைக்கிளில் வந்த இரு இனந்தெரியாத ஆயுததாரிகளால் குறித்த மதபோதகர் சுட்டுக்கொல்லப்படும் காட்சி அருகிலிருந்த சி.சி.ரி.வி. கமெராவில் பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.