நெவில் பெர்னாண்டோ வைத்தியசாலையை அரசாங்கத்திற்கு கையளிக்கும், ஒப்பந்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கையெழுத்திடப்பட்டுள்ளது.  

மாலபே - சைட்டம் தனியார் மருத்துவக் கல்லூரியுடன் தொடர்புடைய நெவில் பெர்னாண்டோ என்ற தனியார் மருத்துவமனையை அரசாங்கம் இன்று பொறுப்பேற்றுக்கொண்டது. அதற்கான ஒப்பந்தம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் கையெழுத்திடப்பட்டது.

மருத்துவர் நெவில் பெர்னாண்டோ மற்றும் சுகாதார அமைச்சின் செயலாளர் ஆகியோர் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

நெவில் பெர்னாண்டோ, மருத்துவமனை, மாலபே, சைட்டம்,