கட்­சியை காட்டிக் கொடுத்­த­வர்கள் பலர்  :புதிய கட்­சியின் தேவை மக்­க­ளுக்கு ஏற்­பட்­டுள்­ளது 

Published By: MD.Lucias

20 Jan, 2016 | 09:57 AM
image

 

புதிய கட்­சி­யொன்று ஆரம்­பிக்­கப்­பட வேண்­டு­மென நான் கூற­வில்லை. ஆனால், புதிய கட்­சி­யொன்று தேவை என்­பதை மக்கள் தீர்­மா­னித்து விட்­டனர் என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார்.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை காட்டிக் கொடுத்­த­வர்கள் பலர். அவர்­களில் சிலர் இங்கும் (குரு­ணா­கல்) உள்­ளனர் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

குரு­நா­கலை "தைலிய" பிர­தே­சத்தில் நேற்று முன்­தினம் இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்ட பின்னர் ஊட­க­வி­ய­ளா­லர்­க­ளுக்கு கருத்து தெரி­விக்­கும்­போதே முன்னாள் ஜனா­தி­ப­தியும், குரு­நாகல் மாவட்ட ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் எம்.பி.யுமான மஹிந்த ராஜ­பக்ஷ இவ்­வாறு தெரி­வித்­துள்ளார்.

அவர் மேலும் தெரி­வித்­தி­ருப்­ப­தா­வது,

புதி­ய­தொரு கட்சி உரு­வாக வேண்­டு­மென நான் எந்­த­வொரு இடத்­திலும் குறிப்­பிட்­ட­தில்லை. ஆனால் மக்­க­ளுக்கு புதி­ய­வொரு கட்­சியின் தேவை ஏற்­பட்­டுள்­ளது என்­பதை அறிய முடி­கி­றது. தற்­போது கலைக்­கப்­பட்­டுள்ள உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்­கான தேர்­தல்­களை அரசு உட­ன­டி­யாக நடத்த வேண்டும்.

நகரம், கிராமம் என பேத­மில்­லாது தற்­போது அனைத்து அபி­வி­ருத்தி திட்­டங்­களும் ஸ்தம்­பித்­து­விட்­டன. நாட்டின் அபி­வி­ருத்தி முன்­னே­ற­வில்லை அனைத்தும் ஆமை வேகத்தில் கூட நகர்­வ­தில்லை. கலைக்­கப்­பட்ட உள்­ளூ­ராட்சி சபை­க­ளுக்கு தேர்­தல்கள் நடத்­தா­விட்டால் அவற்றை செயற்­ப­டுத்­து­வ­தற்­கான நட­வ­டிக்­கை­களை அரசு முன்­னெ­டுக்க வேண்டும். தனி­யான கட்சி உரு­வாக்­கப்­பட வேண்டும். தனிக்­கட்சி உரு­வாக்­குவேன் என நான் எந்­த­வொரு இடத்­திலும் கூறி­ய­தில்லை.

ஸ்ரீ லங்கா சுதந்­திரக் கட்­சியை காட்டிக் கொடுக்­காத பரி­சுத்­த­மான கட்சிக்காரர்களுக்கு நான் என்றும் உதவி புரிவேன். சுதந்திரக் கட்சியை காட்டிக் கொடுத்த பலர் இருக்கின்றனர். அவர்களில் சிலர் இந்த குருநாகலையிலும் உள்ளனர் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக குழுக்களைச் சேர்ந்த மேலும்...

2024-04-19 12:26:04
news-image

கலால் திணைக்களத்தின் அதிகாரி பணி இடைநிறுத்தம்!

2024-04-19 12:25:16
news-image

அநுர, சஜித் சிறு பிள்ளைகள், நாட்டைக்...

2024-04-19 12:12:49
news-image

நச்சுத்தன்மைமிக்க போதைப்பொருட்களுடன் 10 பெண்கள் உட்பட...

2024-04-19 12:10:56
news-image

செவ்வாய் கிரகத்தில் வாழ்வது எப்படி :...

2024-04-19 12:25:52
news-image

கடுகண்ணாவை நகரை சுற்றுலாத் தலமாக அபிவிருத்தி...

2024-04-19 11:42:14
news-image

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு 71 வயதான...

2024-04-19 11:48:31
news-image

பிரிட்டிஸ் சிறுவர்களிற்கு வழங்கும் அதேபாதுகாப்பை டியாகோர்கார்சியாவில்...

2024-04-19 11:32:34
news-image

சுதந்திரக் கட்சியின் உள்ளக விவகாரங்களில் தலையிடும்...

2024-04-19 11:35:43
news-image

போதைப்பொருள் மாத்திரைகளை வைத்திருந்த இருவர் புல்மோட்டையில்...

2024-04-19 11:35:04
news-image

கொஸ்கமவில் லொறி கவிழ்ந்து விபத்து ;...

2024-04-19 11:17:01
news-image

அருட்தந்தை தந்தை சிறில் காமினி குற்றப்...

2024-04-19 11:03:22