டேவிஸ் கிண்­ணத்­திற்­கான ஆசிய கடல்சூழ் (ஏஷியன் பெசிவிக்) பிராந்­தி­யத்­திற்­கான மூன்றாம் பிரிவு டென்னிஸ் போட்­டியை மிகுந்த சவா­லுக்கு மத்­தியில் இலங்கை எதிர்­கொள்­ள­வுள்­ளது. 

ஒன்­பது நாடுகள் இரண்டு குழுக்­களில் பங்­கு­பற்றும் இப் போட்டி இன்­று­முதல் எதிர்­வரும் 22ஆம் திக­தி­வரை இலங்கை டென்னிஸ் சங்க கடி­ன­தரை அரங்­கு­களில் நடை­பெ­ற­வுள்­ளன.

இப் போட்­டியை முன்­னிட்டு இலங்கை அணியில் ஹர்­ஷன கொட­மான்ன, ஷார்மல் திசா­நா­யக்க, யசித்த டி சில்வா, நிஷாங்கன் நட­ராஜா ஆகியோர் பெய­ரி­டப்­பட்­டுள்­ள­துடன் விளை­யா­டாத அணித் தலை­வ­ராக முன்னாள் டேவிஸ் கிண்ண வீரர் ரொஹான் டி சில்வா நிய­மிக்­கப்­பட்­டுள்ளார்.

இரண்டு ஒற்­றையர் போட்­டி­க­ளிலும் மாற்று ஒற்­றையர் போட்­டி­க­ளிலும் ஹர்­ஷன கொட­மான்­னவும் ஷார்மல் திசா­நா­யக்­கவும் விளை­யா­ட­வுள்­ள­தாக அணித் தலைவர் ரொஹான் டி சில்வா தெரி­வித்தார்.

தொடர்ச்­சி­யாக ஒவ்­வொரு நாளும் போட்­டி­களில் விளை­யாட வேண்­டி­யுள்­ளதால் இரட்­டை­ய­ருக்­கான போட்­டியில் விளை­யா­ட­ வுள்­ள­வர்­களை அந்­தந்த தினத்தில் தெரிவு செய்­ய­வுள்­ள­தாக அவர் கூறினார்.

இலங்கை அணியைப் பொறுத்­த­மட்டில் 31 வய­தான ஹர்­ஷன கொட­மான்ன பிர­தான வீர­ராக இடம்­பெ­று­கின்றார். அண்­மையில் நடை­பெற்ற சர்­வ­தேச பியூச்சர் டென்னிஸ் போட்­டி­களில் கால் இறு­தி­வரை முன்­னேறி தனது ஆற்­றலை வெளிப்­ப­டுத்­தினார்.

சிரேஷ்ட வீரரும் இடது கை ஆட்­டக்­கா­ர­ரு­மான இவர் 46 போட்­டி­களில் விளை­யாடி 38இல் வெற்­றி­பெற்­றுள்ளார். 24 இரட்­டையர் போட்­டி­களில் 9 போட்­டி­களில் வெற்­றி­பெற்­றுள்ளார்.

அணியில் இடம்­பெறும் மற்­றைய முக்­கிய வீரர் 21 வய­தான ஷார்மல் திசா­நா­யக்க ஆவார். வலது கை ஆட்­டக்­கா­ர­ரான இவர் 2014முதல் இலங்கை அணியில் விளை­யாடி வரு­கின்றார். 

அணியில் இடம்­பெறும் மற்­றொரு வீர­ரான யசித்த டி சில்வா (22 வயது) பெரும்­பாலும் இரட்­டையர் போட்­டியில் விளை­யாட வாய்ப்­புள்­ளது.

கடந்த வருடம் டேவிஸ் கிண்ணப் போட்­டியில் அறி­மு­க­மான நிஷாங்கன் நட­ராஜா (21 வயது) உள்ளூர் போட்­டி­களில் பெரு முன்­னேற்­றத்தை வெளிப்­ப­டுத்தி வரு­கின்றார். 

குழு நிலைப் போட்­டிகள் நிறைவில் முதல் இரண்டு இடங்­களைப் பெறும் நாடுகள் இறுதிச் சுற்றில் விளை­யாடும். முடிவில் முத­லி­ரண்டு இடங்­களைப் பெறும் நாடுகள் இரண்டாம் பிரி­வுக்கு தரமுயர்த்தப்படும்.

மற்றைய குழுக்களில் கடைசி இரண்டு இடங்களை அடையும் அணிகளுக்கு இடையில் நடத்தப்படும் போட்டிகளில் தோல்வி அடையும் நாடுகள் நான்காம் பிரிவுக்கு தரமிறக்கப்படும்.