இந்­திய – அவுஸ்­தி­ரே­லிய அணிகள் மோதும் 4ஆவது ஒருநாள் போட்டி கான்­பெ­ராவில் இன்று நடக்­கி­றது.

டோனி தலை­மை­யி­லான இந்­திய அணி முதல் 3 ஆட்­டத்­திலும் தோற்று தொடரை இழந்­துள்ள நிலையில் இன்­றைய போட்­டி­யி­லா­வது வென்று தோல்­விக்கு முற்­றுப்­புள்ளி வைக்­குமா என்­ப­துதான் பல­ரது எதிர்­பார்ப்­பாக இருக்­கி­றது.

முதல் 3 போட்­டி­க­ளிலும் துடுப்பாட்ட வீரர்கள் சிறப்­பாக விளையாடி ஓட்­டங்­களைக் குவித்த போதிலும் தோல்வி ஏற்­பட்­டது. பந்­து­வீச்சில் நிலை­யற்ற தன்­மையால் அவுஸ்­தி­ரே­லியாவில் வெற்றி பெற முடி­யாமல் இந்­தியா திணறி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.