அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகின்ற பிக் பாஷ் இருபதுக்கு 20 லீக் தொடரின் நேற்றைய போட்டியில் அடிலெய்டு ஸ்ட்ரைக்கர்ஸ்- மெல்போர்ன் ரெனேகட்ஸ் அணிகள் மோதின. 


இப்போட்டியில் கெய்ல் 12 பந்துகளில் 1 பவுண்டரி 7 சிக்சர்கள் அடங்கலாக  51 ஓட்டங்கள் பெற்று  அதிகவேகமாக அரைசதம் அடித்து இந்திய வீரர் யுவராஜ் சிங்கின் சாதனையை அவர் சமன் செய்தார்.


இது தொடர்பாக யுவராஜ்சிங் அவரின் டுவிட்டர் பக்கத்தில் இந்த போட்டியில் முடியாமல் போய்விட்டது முடிந்தால் இனிவரும் போட்டியில் 10 பந்துகளில் அரை சதம் கடக்க முயலுங்கள் என்று எ.பி டிவிலியஸ்க்கும் ,கெய்லுக்கும் சவால் விட்டுள்ளார் .