யார் வெளி­யே­றி­னாலும் தேசிய அர­சாங்­கத்தை தேசிய அர­சாங்­கத்தின் பத­விக்­காலம் நிறை­வ­டையும் வரை ஆட்­சியை கொண்டு நடத்த ஐக்­கிய தேசிய கட்­சியின் செயற்­குழு தீர்­மா­னித்­துள்­ளது.

பிர­தமர் ரணில் விக்கி­ரம­சிங்­கவின் தலை­மையில் ஐ.தே.கட்­சியின் தலை­மை­ய­க­மான  ஸ்ரீ கொத்­தாவில் நேற்று முன்­தினம் 14 ஆம் திகதி மாலை அக்­கட்­சியின் செயற்­குழுக் கூட்டம் நடை­பெற்­றது.

இவ்­வ­ருடம் இடம்­பெ­ற­வுள்ள ஐ.தே.கட்­சியின் 70 ஆம் ஆண்டு பூர்த்தி விழாவை கோலா­க­ல­மாக கொண்­டா­டு­வது தொடர்­பாக செயற்­குழுக் கூட்­டத்தில் விரி­வாக ஆரா­யப்­பட்­டது.நாட்­டுக்கு திறந்த பொரு­ளா­தா­ரத்தை அறி­மு­கப்­ப­டுத்­திய 40 வரு­டங்கள் பூர்த்­தி­யாகும் சந்­தர்ப்­பத்தில் வரும் கட்­சியின் 70 ஆம் ஆண்டு பூர்த்தி விழா குறித்து மக்­களை தெளி­வு­ப­டுத்­தவும் தீர்­மா­னிக்­கப்­பட்­டது.

பிர­தான இரு­கட்­சி­களும் ஒன்­றி­ணைந்து தேசிய அர­சாங்­கத்தை நிறு­வி­யதால் நாட்­டுக்கு ஏற்­பட்ட பிர­தி­ப­லன்கள் தொடர்­பா­கவும் செயற்­கு­ழுவில் தொடர்ந்து தெளி­வு­ப­டுத்­தப்­பட்­டது. யார் வெளி­யே­றி­னாலும் அரசை எதுவித இடையூறுமின்றி முழுப்பதவிக்காலத்திலும் கொண்டு நடத்தவும் செயற்குழுவில் தீர்மானிக் கப்பட்டது.