உச்ச நீதி மன்றத்தில் இந்திய மத்திய அரசாங்கத்திற்கு வழங்கப்பட்ட ஆணையின் பேரிலேயே 3500 க்கும் மேற்பட்ட சிறுவர் பாலியல் இணையத்தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

அதிகரித்து வரும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோகங்களை தடுக்கும் பொருட்டு பாதிக்கப்பட்டவர்களும் சமூக ஆவலர்களும் ஒன்றினைந்து உச்ச நீதி மன்றில் தாக்கல் செய்திருந்த வழக்கு விசாரணை கடந்த மாதம் இடம் பெற்றது.

இவ் வழக்கு விசாரணை உச்ச நீதிமன்ற நீதிபதி தீபக் மிஸ்ரா உட்பட மூன்று நீதி பதிகளினால் முன்னெடுக்கப்பட்டது. 

இதன் போதே அதிகப் படியான சிறுவர் பாலியல் வன் முறைகளுக்கு காரணமாக திகழும் சிறுவர் பாலியல் இணையத்தளங்களை முடக்குமாறு மத்திய அரசிற்கு கட்டளை பிறப்பிக்கப்பட்டது.