மனைவியை பொல்லால் அடித்துக் கொலைசெய்த கணவனை கைதுசெய்துள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த கொலைச் சம்பவம் இன்று காலை 9 மணியளவில் திருக்கோவில் முனையக்காடு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

குடும்பத்தில் மற்றுமொரு பெண்ணின் தலையீடு காரணமாக ஏற்பட்ட குடும்பத்தகராறில் மனைவி மீது கணவன் பொல்லொன்றால் தாக்குதல் நடத்தியுள்ளார்.

கணவன் மனைவியின் தலையில் பொல்லால் தாக்குதலை மேற்கொண்டதையடுத்து ஸ்தலத்திலேயே மனைவி இறந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சம்பவத்தில் 40 வயதுடைய இளையதம்பி யோகேஸ்வரியெனும் ஒரு பிள்ளையின் தாயே உயிரிழந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடைய கணவன் திருக்கோவில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளையும் மேற்கொண்டு வருகின்றனர்.