இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ் அணி­க­ளுடன் இலங்கை கனிஷ்ட அணி போட்­டி­யிடும் முத­லா­வது சர்­வ­தேச கனிஷ்ட கோல்ப் சம்­பி­யன்ஷிப் போட்­டிகள் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் இலங்­கையில் நடை­பெ­ற­வுள்­ளது.

இலங்­கையில் கோல்ப் விளை­யாட்டின் தேசிய அமைப்­பாகச் செயற்­படும் இலங்கை கோல்ப் ஒன்­றியம், எச்.எஸ்.பி.சி. வங்கியுடன் இணைந்து முதன்­மு­றை­யாக சர்­வ­தேச கனிஷ்ட கோல்ப் சம்­பி­யன்ஷிப் போட்­டியை இவ்­வ­ருடம் இலங்­கையில் நடத்­து­வ­தற்கு ஏற்­பாடு செய்­துள்­ளது.

இலங்­கையில் கனிஷ்ட மட்­டத்­தி­லான கோல்ப் விளை­யாட்டின் தரத்தை மேம்­ப­டுத்தும் நோக்­கத்­து­டனும் எதிர்­கா­லத்தில் தேசிய மற்றும் சர்­வ­தேச மட்­டங்­களில் போட்­டி­யி­டக்­கூ­டிய இளம் கோல்ப் வீரர்­களை இனங்­காணும் முக­மா­கவும் கனிஷ்ட உப குழு இந்த   சம்­பி­யன்ஷிப் போட்டியை ஏற்­பாடு செய்­துள்­ளது.

இந்­தியா, பாகிஸ்தான், பங்­க­ளாதேஷ் மற்றும் தொடரை நடத்தும் இலங்­கை­யுடன் சேர்த்து மொத்தம் நான்கு நாடுகள் பங்­கேற்கும் இந்தப் போட்­டிகள் எதிர்­வரும் ஆகஸ்ட் மாதம் 10ஆம் திகதி கொழும்பு ரோயல் கோல்ப் கழகத் திடலில் நடை­பெ­ற­வுள்­ளது.

இந்தப் போட்டி குறித்து இலங்கை கோல்ப் ஒன்­றி­யத் தலைவர் பிரியத் பெர்­னாண்டோ தெரி­விக்­கை யில், இளம் கோல்ப் வீரர்கள் மத்­தியில் சிறந்த திறமை காணப்­ப­டு­கின்­றமையை சில வரு­டங்­க­ளுக்கு முன் அவ­தா­னித்த எமது சங்கம், எமது இளம் வீரர்­க­ளுக்கு அதிக வாய்ப்­புக்­களை அளிப்­ப­தற்கு வலு­வான கனிஷ்ட கோல்ப் உப குழு­வொன்றை ஏற்­ப­டுத்­தி­யது. இதனூடாகவே சர்வதேச கனிஷ்ட போட்டியை நடத்துவதற்கான எண்ணம் உருவானது என்றார்.