உள்ளூராட்சி தேர்தலுக்கு தயாராகுங்கள் பிரதமர் பணிப்பு

Published By: Priyatharshan

15 Jul, 2017 | 11:10 AM
image

டிசம்பர் மாத­ம­ளவில் உள்­ளூராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் நடை­பெற­வி­ருப்­பதால் அதனை வெற்­றி­க­ர­மாக முகங்­கொ­டுப்­ப­தற்கு அடி­மட்­டத்­தி­லி­ருந்து தயா­ராக இருக்­கு­மாறு பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க தெரி­வித்­துள்ளார்.

ஐக்­கிய தேசியக் கட்­சியின் மத்­திய செயற்­கு­ழுவின் விசேட கூட்டம் நேற்று வெள்ளிக்­கி­ழமை கட்­சியின் தலை­மை­ய­க­மான சிறி­கொத்­தாவில் நடை­பெற்­றது. இதன்­போதே பிர­தமர் ரணில்­விக்­கி­ர­ம­சிங்க மேற்­கண்­ட­வாறு தெரி­வித்­துள்ளார். 

வழ­மைக்கு மாறாக மத்­திய செயற்­கு­ழவின் கூட்டம் மூன்று மணித்­தி­யா­லங்கள் நடை­பெற்­றி­ருந்­தது. இதன்­போது முதலில் ஐக்­கிய தேசியக் கட்­சியின் தலை­வரும், பிர­த­ம­ரு­மான ரணில் விக்­கி­ர­ம­சிங்க பாரா­ளு­மன்­றத்­திற்கு தெரி­வாகி இம்­மாதம் 17ஆம் திக­தி­யுடன் 40ஆண்­டுகள் நிறை­வ­டை­கின்ற நிலையில் அதனை கொண்­டாடும் வகையில் எடுக்­கப்­ப­ட­வேண்­டிய நட­வ­டிக்­கைகள் தொடர்­பாக உறுப்­பி­னர்கள் யோச­னை­களை முன்­வைத்­தனர்.

அத­னை­ய­டுத்து  ஐக்­கிய தேசி­யக்­கட்­சியின் 70 ஆவது ஆண்டு பூர்த்­தி­யா­கின்ற நிலையில் அதனை முன்­னிட்டு விசேட கண்­கா­சி­யொன்றை நடத்­து­வ­தற்கும் பாரி­ய­ள­வி­லான கோல­க­ல­மாக கொண்­டாட்­டங்­களை முன்­னெ­டுப்­ப­தற்­கு­மு­ரிய தயார்ப்­ப­டுத்தல் குறித்தும் ஆரா­யப்­பட்­டுள்­ளது. 

அதற்கு அடுத்­த­ப­டி­யாக உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் குறித்து நீண்ட நேரம் ஆரா­யப்­பட்­டது. விசே­ட­மாக எவ்­வா­றான தேர்தல் முறையை பின்­பற்­று­வது, கிராம மட்­டத்­தி­லி­ருந்து கட்­சியை பலப்­ப­டுத்­துதல், அபேட்­ச­கர்கள் நிய­மனம், பாரா­ளு­மன்ற உறுப்­பி­னர்கள் மற்றும் அமைச்­சர்­களின் பணிகள் உட்­பட பல விட­யங்கள் குறித்து கவனம் செலுத்­தப்­பட்­டது. 

இதன்­போது நிதி மற்றும் தகவல் ஊட­கத்­துறை அமைச்சர் மங்­கள சம­ர­வீர கூட்டு எதி­ர­ணியில் பல குற்­றச்­சாட்­டுக்­க­ளுடன் தொடர்­பு­டை­ய­வர்கள் இருக்­கின்­றார்கள். ஆகவே எமது கட்சி எந்­த­வி­த­மான குற்­றங்­க­ளு­டனும் தொடர்­பு­டை­ய­வர்­களை அபேட்­ச­கர்­க­ளாக அங்­கீ­கா­ரிக்க கூடாது என்ற யோச­னையை முன்­வைத்தார். அந்­த­யோ­ச­னையை மத்­திய குழு உறுப்­பி­னர்கள் ஏக­ம­தாக ஏற்­றுக்­கொண்­டனர். 

அத­னை­ய­டுத்து கருத்து  வெளியிட்ட பிர­தமர் ரணில் விக்­கி­ர­ம­சிங்க, உள்­ளு­ராட்சி மன்­றங்­க­ளுக்­கான தேர்தல் எதிர்­வரும் டிசம்­பரில் நடை­பெ­ற­வுள்­ளது. எமது கட்­சியின் அத­ர­வா­ளர்கள் உட்­பட அனைத்து தரப்­பி­னரும் அடி­மட்ட களத்­தி­லி­ருந்து பணி­களை உட­ன­டி­யாக ஆரம்­பிக்க வேண்­டி­யுள்­ளது. 

குறிப்­பாக பாராளு­மன்ற உறுப்­பி­னர்கள், அமைச்­சர்கள் தாங்கள் பிர­தி­நி­தித்­து­வப்­ப­டுத்தும் பகு­தி­களில் முழு மூச்­சுடன் கட்­சிக்­கான அர்ப்­ப­ணிப்­புடன் செயற்­பா­டு­களை முன்­னெ­டுக்க வேண்டும். இக்­கா­லப்­ப­கு­தியில் மக்கள் பிர­தி­நி­திகள் எவரும் வெளிநாட்­டுப்­ப­ய­ணங்கள் மேற்­கொள்­வதை தவிர்த்­துக்­கொள்ள வேண்டும். அவ்­வா­றான அவ­சியம் ஏற்­ப­டு­மாயின் கட்­சியின் அனு­ம­தியைப் பெற்றே செல்ல வேண்­டி­யது கட்­டா­ய­மாகும். 

இது­வ­ரையில் எந்த முறையில் தேர்தல் நடத்­தப்­படும் என்­பது குறித்து தீர்­மா­னிக்­க­வில்லை. இது குறித்து நாம் ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்­சி­யுடன் பேச்­சு­வார்த்­தை­களை நடத்த வேண்­டி­யுள்­ளது. விரைவில் அந்தச் செயற்­பா­டுகள் தொட­ரப்­ப­ட­வுள்­ளன.  எவ்­வா­றா­யினும் பழைய முறை­மையில் தேர்­த­லொன்­றுக்கு முகங்­கொ­டுப்­ப­த­னையே எமது கட்சி அதிகம் விரும்­பு­கின்­றது என்றார். 

இதே­வேளை கூட்­டத்தின் நிறைவின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து வெ ளியிட்ட கட்­சியின் பொதுச்­செ­ய­லாளர் அமைச்சர் கபீர் ஹாசீம், நாம் தேர்­த­லுக்­கான தயார்­ப­டுத்தல், கட்­சித்­த­லை­வரின் 40 ஆண்­டு­கால பாரா­ளு­மன்ற வாழ்க்கை நிறைவு, கட்­சியின் 70ஆவது ஆண்டுக் கொண்­டாட்டம் குறித்து கலந்­து­ரை­யா­டினோம் என்றார். 

அதன்­போது டிசம்­பரில் தேசிய அர­சாங்­கத்­திற்­கான ஒப்­பந்தம் நிறை­வ­டை­கின்­றது. அது தொடர்பில் கலந்­து­ரை­யா­டப்­பட்­ட­தா என்று எழுப்­பிய கேள்­விக்கு பதி­ல­ளித்­த அவர்.

தேசிய அர­சாங்­கத்­தினை நீடிப்­பதா? இல்­லையா? என்­பது குறித்து நாம் கலந்­து­ரை­யா­டி­யி­ருக்­க­வில்லை. எனினும் தேசிய அர­சாங்­க­மாக தொடர்­வ­தானால் அதற்கு எமது பங்­க­ளிப்பு இருக்கும். அதே நேரம் அவர்கள்(ஸ்ரீலங்கா சுதந்­தி­ரக்­கட்சி) விலக்­கிச்­செல்­வ­தனால் ஐக்­கிய தேசியக் கட்சி அரசாங்கமொன்றினைக் கொண்டு செல்வதற்கும் தயாராகவே இருக்கின்றோம் என்றார்.

இதேவேளை, பிரதி அமைச்சர் ரஞ்சன் ரமநாயக்க கருத்து வெளியிடுகையில், தேசிய அரசாங்கமாக இருக்க வேண்டும் என்பதே எமது விருப்பம்.காரணம் தேசிய அரசாங்கம் நீக்கப்படுமாகவிருந்தால் ஊழல் மோடியைக் கொண்ட மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் சக்தி பெறுவார். மேலும் உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் மகிந்த போட்டியிட்டாலும்  ஆச்சரியப்படுவதற்கு இல்லை. காரணம் அவர் இஸட்டிலிருந்து ஏ க்கு வருபவர் அல்ல. ஏ யிருலிருந்து இஸட்க்கு செல்பவர் என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2024-03-29 06:43:30
news-image

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை நாட்சம்பளமாக 2000...

2024-03-29 01:56:33
news-image

இணையவழி சிறுவர் துஷ்பிரயோகங்களை அறிக்கையிடும் புதிய...

2024-03-29 01:47:30
news-image

பழுதடைந்த உருளைக்கிழங்கு விவகாரம் : மாகாண...

2024-03-29 01:39:20
news-image

இரண்டு மாதங்களில் 983.7 மில்லியன் ரூபா...

2024-03-29 01:36:37
news-image

இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் கிளிநொச்சி...

2024-03-29 01:27:15
news-image

அஜித் நிவாட் கப்ரால் உள்ளிட்ட ஐவருக்கு...

2024-03-29 00:17:44
news-image

தேர்தலை தீர்மானிக்க பஷில் ராஜபக்ஷ தேர்தல்...

2024-03-29 00:05:03
news-image

இரண்டாம் காலாண்டுக்குள் கடன்மறுசீரமைப்பு தொடர்பில் இணக்கப்பாடு...

2024-03-28 21:32:55
news-image

பரந்துப்பட்ட அரசியல் கூட்டணியின் ஜனாதிபதி வேட்பாளராக...

2024-03-28 21:31:49
news-image

தேர்தல் செலவின ஒழுங்குபடுத்தல் சட்டம் குறித்து...

2024-03-28 21:37:50
news-image

நாமலுக்கு இன்னும் காலம் இருக்கிறது ;...

2024-03-28 21:33:56