(லியோ நிரோஷ தர்ஷன்)

இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயம் ஒன்று மேற்கொண்டு இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் எதிர்வரும் பெப்ரவரி மாதம்  5 ஆம் திகதி வெள்ளிக்கிழமை இலங்கை வருகின்றார்.

இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உள்ளிட்ட அரசாங்கத்தின் உயர் மட்டத்தினரையும் எதிர்க்கட்சி தலைவர் இரா.சம்பந்தன் உள்ளிட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பினரையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுஸ்மா சுவராஜ் சந்தித்திக்கவுள்ளார்.