இந்தியாவில் பீகார் மாநிலத்திலுள்ள அரச அலுவலகமொன்று இடிந்து விழும் நிலையில் இருப்பதால் ஊழியர்கள் தலைகவசம் அணிந்து கொண்டு பணி புரிந்து வருகின்றனர். 

பீகாரின் கிழக்கு சாம்பரன் மாவட்டத்தில் உள்ள வட்டாட்சியர் அலுவலகக் கட்டிடம் மோசமான நிலையில் இருப்பதால் குறித்த அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர்கள் அனைவரும் தலைகவசம் அணிந்து பணிபுரிந்து வருகின்றனர்.  

மேலும் வட்டாட்சியர் அலுவலகத்துக்கு வரும் பொதுமக்களும் தங்களைக் காத்துக்கொள்வதற்காக தலைகவசத்துடன் பணிபுரிந்து வருகின்றனர். 

குறித்த கட்டிடம் உபயோகப்படுத்த ஏதுவானது அல்ல என பீகார் பொதுப்பணித்துறை கடந்த வருடமே அறிவித்திட்ட போதும் இதுவரை  அலுவலகத்துக்காக புதிய கட்டிடம் ஒதுக்கப்படவில்லை என்று ஊழியர்கள் குற்றம் சாட்டுகின்றனர். 

இதனால், அந்த ஆபத்தான கட்டிடத்திலேயே வட்டாட்சியர் அலுவலகம் செயல்பட்டு வருகிறது. மேலும்  அடிக்கடி கற்கள் பெயர்ந்து விழுந்ததில் ஊழியர்கள் பலர் காயமடைந்துள்ளதாகவும், மழை நேரத்தில் கட்டிடத்தின் மேற்கூரையில் இருந்து தண்ணீர் வருவதும் வழமையானது என ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.