நாட்டில் பொலித்தீன் பாவனை மற்றும் அதன் உற்பத்தியை அரசாங்கம் தடைசெய்வதானது முகத்தின் மீதான கோபத்துக்கு மூக்கை வெட்டிய கதையை போன்றதென பொலித்தீன் உற்பத்தி, விற்பனை மற்றும் மீள்சுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பொலித்தீன் தடை தொடர்பில் அரசாங்கம் விடுத்துள்ள தடை அறிவிப்பை அடுத்து பொலித்தீன் உற்பத்தி, விற்பனை மற்றும் மீள்சுழற்சியாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளதாவது,  

பொலித்தீன் பாவனையை எதிர்வரும் செப்டம்பர் முதலாம் திகதி முதல் முற்றாக தடைசெய்யப்படவுள்ளது என எவ்வித முன்னறிவித்தலுமின்றி அரசாங்கம் அறிவித்துள்ளது. 

இவ்விடயம் தொடர்பில் அரசாங்கம் எவ்விதமான பேச்சுவார்த்தைகளையும் எம்முடன் முன்கூட்டியே நடத்தவில்லை. 

மக்கள் அதிகமாக பொலித்தீன் பயன்படுத்திவருகின்ற நிலையில் லஞ்ச் ஷீட், ஷொப்பிங் பேக் மற்றும் ரெஜிபோம் ஆகியவற்றை உடனடியாக தடைசெய்வதானது இந்நாட்டின் பொருளாதாரத்துக்குப் பாரிய பின்னடைவை ஏற்படுத்தும்.

அரசாங்கம் எவ்வித முன்னறிவிப்பின்றி தடைவிதிப்பது முகத்தின் மீதான கோபத்துக்கு மூக்கை வெட்டிய கதையைப் போன்றதாகும். இதனால் பொலித்தீன் உற்பத்தி, விற்பனை மற்றும் மீள்சுழற்சியாளர்கள் பெருமளவில் நஷ்ட்டத்தை எதிர்நோக்க வேண்டியேற்படும் எனவும் பொலித்தீன் உற்பத்தி, விற்பனை மற்றும் மீள்சுழற்சியாளர்கள் சங்கம் கூட்டாக தெரிவித்துள்ளனர்.