இந்தியாவுக்கு எதிரான இருபதுக்கு-20 தொடரில் விளையாடவுள்ள  அவுஸ்திரேலிய அணியை அந்நாட்டு கிரிக்கெட்  சபை வெளியிட் டுள்ளது.


17 பேர் உள்ளடங்கிய அவுஸ்திரேலிய அணியில்  தற்போது பிக் பாஷ் லீக் தொடரில் சிறப்பாக விளையாடி வரும் டிராவிஸ் ஹெட் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் அன்ட்ரிவ் டை ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.


மேலும், 32 வயதாகும் அவுஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஷோன் டைட் இடம்பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது .இவர் 161.1 கிலோமீட்டர்  வேகத்தில் பந்துவீசி உலகத்தின்  3வது அதிவேகப் பந்து வீச்சாளர் என்ற பெருமையை பெற்றவர்.


இவர் கடைசியாக 2011 ஆம் ஆண்டு  அவுஸ்திரேலிய அணியில் இடம்பெற்றிருந்தார் .


இருபதுக்கு20 தொடருக்கான அவுஸ்திரேலிய அணி:-
1. ஆரோன் பிஞ்ச் (அணித்தலைவர்), 2. டேவிட் வோர்னர், 3. ஸ்மித், 4. வோட்சன், 5. மேக்ஸ்வெல், 6. மேத்யூ வடே, 7. ஜேம்ஸ் பால்க்னர், 8. ஜான் ஹாஸ்டிங்ஸ், 9. ஷோன் மார்ஷ், 10. கேமரூன் பாய்ஸ், 11. நாதன் லயன், 12. கிறிஸ் லின் 13. டிராவிஸ் ஹெட், 14. கேன் ரிச்சட்சன், 15. ஆண்ட்ரூ டை, 16. ஸ்காட் போலந்து, 17. ஷோன் டைட்.