தாயாரொருவர் கணவனுடன் கள்ளத்தொடர்பை பேணிவந்த நிலையில், கணவன் மது அருந்திவிட்டுவந்த போது தாய்க்கும் கணவனுக்கும் இடையிலான கள்ளத்தொடர்பை கையும் களவுமாக பிடித்த மனைவி பொலிஸில் முறைப்பாடு செய்துள்ள சம்பவமொன்று ஹெம்மாத்தகம பகுதியில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

கடந்த சில வருடங்களுக்கு முதல் விஷம் அருந்தி கணவன் தற்கொலை செய்துகொண்டதையடுத்து, தனித்து வாழந்துவந்த தாயாரொருவர் வேறு இடத்தில் வசித்து வந்த தனது மகளையும் மருமகனையும் தன்னோடு அழைத்து வந்து வீட்டில் வசித்து வந்துள்ளார்.

இந்நிலையில் குறித்த தாயார் மகளின் கணவனுடன் முறையற்ற உறவு முறையை ஏற்படுத்திக் கொண்டுள்ளார். 

இதேவேளை, தாயும் கணவனும் மறைவிடமொன்றில் இருந்து இரகசியமாக பேசிக்கொண்டிருந்ததை அவதானித்த மகளுக்கு சந்தேகம் தொற்றிக்கொள்ள தாயின் தொடர்ச்சியான நடவடிக்கைகளை நீண்டகாலம் அவதானித்து வந்துள்ளார்.

ஒரு நாள் கணவன் மது அருந்தி வந்துள்ளவேளை தாய்க்கும் கணவனுக்கும் இடையிலான முறையற்ற உறவு மகளிடம் கையும் களவுமாக பிடிபட, அவர் ஹெம்மாத்தகம பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார்.

இந்லையில் சம்பவத்துடன் தொடர்புடைய மூவருக்கும் ஹெம்மாத்தகம பொலிஸார்  எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.