இலங்கைக்கும் பங்களாதேஷுக்கும் இடையில் நிலவும் எல்லையற்ற உறவு காரணமாக இலங்கைக்காக எமது நாடு ஆற்றமுடியாத விடயங்கள் எதுவுமில்லை எந்த சந்தர்ப்பத்திலும் இலங்கை எதிர்பார்க்கும் உதவியை செய்வதற்கு எமது நாடு தயாராக இருக்கின்றது என பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர் அபுல் ஹஸன் மகமூத் அலி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவிடத்தில் தெரிவித்துள்ளார். 

பங்களாதேஷுக்கு மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவுக்கும் பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர்   அபுல் ஹஸன் மகமூத் அலிக்கும் இடையிலான சந்திப்பு இன்று பிற்பகல் டாக்கா நகரில் நடைபெற்ற போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.