மாணவியை துஷ்பிரயோகத்திற்குட்படுத்திய ஆசிரியர் கைது : மஸ்கெலியாவில் சம்பவம் 

19 Jan, 2016 | 04:24 PM
image

(க.கிஷாந்தன்)

மாணவி ஒருவரை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக சந்தேகத்தின் பேரில் பாடசாலை ஆசிரியர் ஒருவரை மஸ்கெலியா பொலிஸார் இன்று கைது செய்துள்ளனர்.

மஸ்கெலியா ஸ்டஸ்பி தேவகந்த என்னும் பிரதேச பாடசாலை ஒன்றின் திருமணமான இரண்டு பிள்ளைகளின் ஆசிரியர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

தரம் 11 இல் கல்வி பயிலும் பாடசாலை மாணவியை, ஆசிரியர் துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவிக்கின்றனர். 

மாணவியின் பெற்றோர்கள் இன்று ஹட்டன் கல்வி வலய அதிகாரிகளுக்கு முறையிட்டதன் பின் மஸ்கெலியா பொலிஸ் நிலையத்தில் செய்த முறைப்பாட்டுக்கு அமைய குறித்த ஆசிரியரை பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்துள்ளனர். 

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 14 ஆம் திகதி குறித்த ஆசிரியரின் வீட்டில் மாணவியை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக குறித்த மாணவி பொலிஸாருக்கு வாக்குமூலம் வழங்கியுள்ளதாக மஸ்கெலியா பொலிஸார் மேலும் தெரிவிக்கின்றனர். 

மாணவி மருத்துவ பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ள ஆசிரியர் நாளை அன்று ஹட்டன் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27