வவுனியாவில் இளைஞர் குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலின் போது 4 இளைஞர்கள் காயமடைந்து வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவம் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் 4 மணியளவில் வவுனியா செக்கட்டிபிலவு பகுதியில் இடம்பெற்றுள்ளது.

வவுனியா செக்கட்டிபிலவு பகுதியிலுள்ள இளைஞர்கள் மீது வேறு பகுதிகளிலிருந்து வந்த இளைஞர்கள் சிலர் தர்க்கத்தில் ஈடுபட்டனர். 

இதையடுத்து குறித்த வாய்த்தர்க்கம் இறுதியில் மோதலாக மாறியுள்ளது. 

இதில் செக்கட்டிப்பிலவு பகுதியைச் சேர்ந்த அ. மயூரன் வயது 28, பி. சுவிதரன் வயது 27, கே. இந்திரன் வயது 27, கே தங்கீதன்  வயது 24 ஆகியோர் மீது கம்பி மற்றும் தடிகள் கொண்டு தாக்குதல் நடைபெற்றுள்ளதாகவும் தாக்குதலில் நால்வர் காயமடைந்ததையடுத்து தாக்குதல் நடத்தியவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டதாகவும் காயமடைந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.  

இளைஞர்கள் மீதான தாக்குதல் தொடர்பாக நெளுக்குளம் பொலிசார் லேதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.