கை பெரு­விரல் துண்­டிக்­கப்­பட்ட  இளைஞர் ஒரு­வ­ருக்கு  அவ­ரது கால் பெரு­வி­ரலை அறுவைச் சிகிச்­சையின் மூலம் பொருத்தி அவுஸ்­தி­ரே­லிய மருத்­துவர்கள் சாதனை படைத்­துள்­ளனர்.

 மேற்கு அவுஸ்­தி­ரே­லி­யாவைச் சேர்ந்த ஸக் மிட்செல் (20  வயது)  என்ற மேற்­படி இளைஞர்  கடந்த ஏப்ரல் மாதம்  தனது வீட்டுப் பண்­ணையில் வேலை செய்து கொண்­டி­ருந்த போது அங்­கி­ருந்த எருது ஒன்று  அவரை இடித்துத் தள்­ளி­யதால் அவ­ரது  கை பெரு­விரல் அந்த வேலியில் சிக்கி  துண்­டிக்­கப் ­பட்­டது.

இத­னை­ய­டுத்து துண்­டிக்­கப்­பட்ட அந்தப் பெரு­வி­ரலை மீளப் பொருத்­து­வ­தற்­கு மேற்கொள்ளப்பட்ட   செயற்­கி­ரமம் தோல்­வி­ய­டைந்­தது. இந்­நி­லையில்  சிட்னி கண் மருத்­து­வ­ம­னையைச் சேர்ந்த பிளாஸ்டிக் சத்­திர சிகிச்சை  நிபு­ணர்கள் 8  மணிநேர சத்­திர சிகிச்சையை மேற்­கொண்டு அவ­ரது   கால்பெரு விரலை அவரது கைப்பெ­ரு­வி­ர­லுக்கு பதி­லாக  பொருத்­தி­யுள்­ளனர். இதன் கார­ண­மாக அவர் எதிர்­கா­லத்தில்  தனது கையை வழமை போன்று செயற்படுத்தக்     கூடியதாகவிருக்கும் எனத் தெரிவிக்கப்ப டுகிறது.