2009ஆம் ஆண்டு பாகிஸ்தான் லாகூர் நகரில் இலங்கை கிரிக்கெட் அணி மீதான பயங்­க­ர­வாதத் தாக்­குதல் தொடர்­பா­கவும் 2011ஆம் ஆண்டு நடை­பெற்ற உல­கக்­கிண்ணத் தொடரின் இறுதிப் போட்­டியில் இந்­தி­யா­விடம் இலங்கை அணி தோல்­வி­ய­டைந்­தது குறித்தும் விசா­ரணை மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் என்று முன்னாள் இலங்கை கிரிக்கெட் அணித் தலை­வரும் அமைச்­ச­ரு­மான அர்­ஜுன ரணதுங்க தெரி­வித்­துள்ளார்.

Image result for அர்­ஜுன ரணதுங்க virakesari

அவர் மேலும் தெரிவிக்கையில், குமார் சங்­கக்­காரவும் இது குறித்து விசா­ரணை நடத்­த­வேண்டும் என்ற வேண்­டு­கோளை இப்­போது விடுத்­துள்ளார். 

நானும் அதையே வலி­யு­றுத்­து­கிறேன். 2011ஆம் ஆண்டு நடை­பெற்ற உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப் போட்­டியில் இலங்கை அணி எப்­படி தோற்­றது, ஏன் அப்­படி நடந்­தது என்­பது குறித்து விசா­ரணை நடத்துங்கள் என்று கூறி சர்ச்சையை கிளப்பியுள்ளார்.