காதலனை வீட்டுக்கு அழைத்து காதலில் ஈடுபட்டவேளையில் வீட்டிற்குள் நுழைந்த தாயாரால் அசிட் வீச்சு மேற்கொள்ளப்பட்ட சம்பவமொன்று தெடிகம பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது,

தாய் இறப்பர் பால் எடுக்கசென்ற வேளை, மகளொருவர் தனது காதலனை வீட்டுக்கு அழைத்துள்ளார். 

தாயார் இறப்பர் பால் எடுத்து வீட்டுக்கு திரும்பிய வேளை வீட்டில் காதலனுடன் தனது மகள் இருந்தததைக் கண்டுள்ளார்.

இதனால் ஆத்திரமடைந்த தாய் தனது கையில் வைத்திருந்த கத்தியால் மகள் மீது தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இந்நிலையில், தனது காதலியை கத்தியால் தாக்குவதை பொறுக்கமுடியாத  காதலன் தாயிடமிருந்த கத்தியைப் பறித்து அவர் மீது பதில் தாக்குதல் மேற்கொண்டுள்ளார்.

இதையடுத்து தாயார் குறித்த காதலனை வீட்டின் அறைக்குள் அடைத்து வைத்து யன்னல் ஊடாக அசிட் வீச்சு தாக்குதலை மேற்கொண்டுள்ளார்.

அசிட் மற்றும் கத்தி தாக்குதலில்  மகளும் காதலனும் காயமடைந்த நிலையில் கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இச் சம்பவத்துடன் தொடர்புடைய தாயார் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய காதலனால் ஏற்கனவே பாலியல் துஷ்பிரயோகம் மேற்கொள்ளப்பட்ட நிலையில் சம்பவத்துடன் தொடர்புடைய பெண் ஒரு வருடகாலமாக நன்னடத்தை பள்ளியில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இச் சம்பம் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.