பிபிலையைச் சேர்ந்த நில்கல என்ற பாரிய வனப் பிரதேசத்தில் இன்று ஏற்பட்ட தீயினால் 100 ஏக்கர் கொண்ட வனப்பகுதி எரிந்துள்ளது.

குறித்த தீ பரவலினால் பெருமளவிலான மூலிகைகள் நாசமாகியுள்ளதுடன் காட்டு மிருகங்கள் பலவும் உயிரிழந்திருக்கக்கூடுமென அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். 

இதையடுத்து அப்பகுதி பொலிசாரும், இராணுவத்தினரும், பொதுமக்களும் இணைந்து, தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.