கச்சதீவு பகுதியை அண்மித்த நெடுந்தீவுக் கடற்பரப்பு பகுதியில் அத்து மீறி மீன்பிடியில் ஈடுபட்ட இந்திய மீனவர் எழுவர் இன்று அதிகாலை கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடற்படையினரால் கைது செய்யப்பட்ட ஏழு இந்திய மீனவர்களுடன் இரண்டு படகுகளும் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் காங்கேசன்துறை துறைமுகப் பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டு கடற்படையினரால் பதிவுகள் மேற்கொள்ளப்பட்ட பின்னர் யாழ் கடல்தொழில் நீரியல் வளத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைகப்படுள்ளனர்.

இந்நிலையில், மீனவர்களை ஊர்காவற்துறை  நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட நடவடிக்கைகள் மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.