பங்களாதேஷ் பயணமானார் ஜனாதிபதி

Published By: Priyatharshan

13 Jul, 2017 | 10:28 AM
image

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் விஜயம் மேற்கொண்டு இன்று காலை பங்களாதேஷ் நோக்கி புறப்பட்டு சென்றுள்ளார்.

ஸ்ரீலங்கன் விமான சேவைக்கு சொந்தமான யு.எல். 189 என்ற விமானத்தின்  ஊடாக ஜனாதிபதி உள்ளிட்ட தூதுக்குழுவினர் பங்களாதேஷ் நோக்கி  பயணமாகியுள்ளனர்.

பங்களாதேஷ் பிரதமர் ஷேக் ஹஸீனா அம்மையாரின் அழைப்பின் பேரில் மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயமாக  ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, பங்களாதேஷ் பிரதமர் மற்றும் ஜனாதிபதி ஆகியோருடன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதுடன், பங்களாதேஷ் வெளிவிவகார அமைச்சர், சுகாதார அமைச்சர், சபாநாயகர் மற்றும் எதிர்க்கட்சி தலைவரையும் சந்தித்து பேசவுள்ளார்.

இலங்கை - பங்களாதேஷ் ஆகிய இரு நாடுகளுக்கிடையிலான இராஜதந்திர தொடர்புகள் கடந்த 1972 ஆம் ஆண்டில் ஆரம்பமாகின. இலங்கையில் பங்களாதேஷின் முதலீட்டை அதிகரிப்பது தொடர்பிலும், கடல்சார், கல்வி, சுற்றுலா, மீன்பிடி, சுகாதாரம் போன்ற துறைகளிலான தொடர்புகளை மேம்படுத்துவது தொடர்பிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதுடன், இரு நாடுகளுக்குமிடையில் விவசாய, கல்வி, வெளிவிவகார பயிற்சி, குடிவரவு மற்றும் குடியகல்வு போன்ற விடயங்களிலான புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் கைச்சாத்திடப்படவுள்ளன.

இலங்கை மற்றும் பங்களாதேஷ் நாடுகளுக்கிடையே 142 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான வர்த்தகம் இடம்பெறுகிறது. அந்த வர்த்தகத்தை மேலும் அதிகரிப்பதற்காக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் தொடர்பிலும் இந்த விஜயத்தின்போது விசேட கவனம் செலுத்தப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58