மன்னார் கரிசல் பகுதியில் சமாதான சூழ்நிலையை உருவாக்க முஸ்லிம் பிரதிநிதிகள் ஆயர் இல்லத்தில் சந்திப்பு

Published By: Robert

13 Jul, 2017 | 02:19 PM
image

மன்னார் மாவட்­டத்தில் கரிசல் கிராமத்தில் இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையே நில­வி­யுள்ள முறுகல் நிலையை தணித்து அப்­ப­கு­தி­யி­லுள்ள இரு சமூ­கத்­தி­ன­ருக்­கி­டையே சுமுக நிலையை உரு­வாக்கி அமை­தியை ஏற்­ப­டுத்தும் நோக்­குடன் வடக்கு முஸ்லிம் சமூகப் பிர­தி­நி­திகள் கடந்த செவ்வாய்க்கிழமை மன்னார் ஆயர் இல்­லத்­துக்குச் சென்று பேச்சு வார்த்­தையில் ஈடு­பட்­டனர்.

இப்பேச்சுவார்த்­தை­யின்­போது வடக்கு முஸ்லிம் சிவில் சமூக பிர­திநிதி­க­ளுடன் பெரிய கரிசல் முஸ்லிம் பிர­தி­நிதிகளும் மன்னார் மறை­மா­வட்ட அப்­போஸ்­த­லிக்க பரி­பா­லகர் ஆயர் மேதகு கிங்ஸ்லி சுவாம்பிள்ளை ஆண்­ட­கையும், குரு முதல்வர் அருட்­பணி ஏ.விக்ரர் சோசை அடி­க­ளா­ருடன் மன்னார் கத்­தோ­லிக்க ஒன்­றி­யத்தின் தலைவர் கென்­னடி ஆகி­யோரும் பங்கேற்றிருந்தனர். இப்பேச்சுவார்த்­தையில் கடந்த ஓரிரு தினங்­க­ளுக்கு முன் இடம்­பெற்ற வன்­செ­யல்கள் தொடர்­பாக தற்­பொ­ழுது சட்ட நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­பட்­டுள்­ளதால் அதை விடுத்து இரு சமூ­கங்­க­ளுக்­கி­டையே எதிர்காலத்தில் இவ்­வா­றான நிலை தொட­ரா­தி­ருக்­கு­மு­க­மாக எடுக்கவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பாக ஆரா­யப்­பட்­ட­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. இதற்­க­மைய மன்னார் மாவட்ட சமூக நல்­லி­ணக்­கத்தை நோக்­காகக் கொண்டு ஒரு சுமுக­மான நட­வ­டிக்­கை­யாக கரிசல் கிரா­மத்தில் 'சமா­தான செய­லணி' ஒன்­றினை இஸ்­லா­மி­ய, கத்­தோ­லிக்­க, இந்து மக்­களை உள்­ள­டக்­கி­ய­தாக ஸ்தாபித்தல், அங்கு வாழ்­கின்ற மக்­களின் மத ரீதி­யான கிரி­யை­க­ளின்­போது அவர்கள் சுய­மாக செயல்­ப­டு­வ­தற்கு ஒரு சாராரால் மற்­றொ­ரு­வ­ருக்கு இடை­யூ­று­களோ அச்­சு­றுத்­தல்­களோ ஏற்­ப­டாத வண்ணம் செயற்­ப­டுதல், இதனை சமூ­க­ரீ­தியில் உத்­த­ர­வா­தப்­ப­டுத்­துதல், குறித்த காணி தொடர்­பி­லான பிணக்­கினைத் தீர்ப்­ப­தற்கு முன்­னோ­டி­யா­க, குறித்த காணி தொடர்பில் முழு­மை­யான தகவல் திரட்­டொன்­றி­னை­யும்,  நடு­நி­லை­யான ஆய்­வொன்­றி­னையும் மேற்­கொள்ளல், ஆகிய முக்­கிய மூன்று தீர்­மா­னங்கள் மேற்­கொள்­ளப்­பட்­ட­தோ­டு, இது­வரை மீறப்­பட்­டுள்ள சட்டம் ஒழுங்கு சார்ந்த விட­யத்தில் பொலி­ஸாரின் சட்ட ரீதி­யான நட­வ­டிக்­கைகள் முன்­னெ­டுக்­கப்­ப­டு­வ­தற்கு இடை­யூ­றாக எவரும் செயற்­ப­டு­வ­தில்லை என்றும் கருத்துத் தெரி­விக்­கப்­பட்­டது. தற்­போது ஏற்­பட்ட பதற்­ற­மான சூழ்­நி­லை­களை தணிக்கும் விதத்தில் இரண்டு சமூ­கங்­க­ளையும் பள்­ளி­வாயல் நிர்­வா­க­மும், ஆலய நிர்­வா­கமும் அத்­து­மீ­றல்கள் இடம்­பெறா வண்ணம் நிலை­மை­களை வைத்­தி­ருத்தல் என்றும் தீர்­மா­னிக்­கப்­பட்­ட­தா­கவும் தெரிவிக்கப்படுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27