Image result for கயந்த கருணாதிலக்க virakesari

மலையகத்தில் தோட்ட மக்களுக்காக 2010 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில்   "நவ ஜீவன"  மற்றும் "பசும் பொன்"  ஆகிய வீடமைப்பு திட்டங்களின் கீழ் நிர்மாணிக்கப்பட் டுள்ள 2864 வீடுகளுக்கான முறையான உறுதிப்பத்திரங்களை பெற்றுக் கொடுப்பதற்கு  மலையக புதிய கிராமங்கள்  உட்கட்டமைப்பு  வசதி கள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்  ப.திகாம்பரம் முன்வைத்த  அமைச்சரவைப் பத்திரத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் கயந்த கருனாதிலக்க தெரிவித்தார். 

அரசாங்கத் தகவல் திணைக்களத்தில்  நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை   அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு  கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் குறிப்பிடுகையில்  மேலும் குறிப்பிடுகையில் 

பெருந்தோட்ட மக்களுக்காக 2010 ஆம் ஆண்டு "நவஜீவன" வீட்டுத்திட்டத்தின் கீழ் 1122 வீடுகளும்  2016 ஆம் ஆண்டு "ஹரித ரன்"  வீட்டுத்திட்டத்தின் கீழ் 1742 வீடுகளும் நிர்மாணிக்கப்பட்டு மக்களிடம்  ஒப்படைக்கப்பட்டுள்ளன.  

மேலும் இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் "ஹரி தரன்"  திட்டத்தின் கீழ் 2000  வீடுகள் அமைக்கப்படவுள்ளன.  இதனூடாக 1134 வீடுகளை முதற்கட்டமாக  நிர்மாணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 

தோட்ட மக்கள் உயர்ந்த வாழ்க்கைத்தரத்தைப் பெற்றுக்கொள்வதற்காக  7 பேர்ச்சஸ் காணிகளைப் பெற்றுக்கொடுப்பதற்கு ஏற்கனவே அங்கீகாரம் கிடைத்துள்ளது. 

இந்நிலையில் 2010 ஆம் ஆண்டிலிருந்து 2016 ஆம் ஆண்டுவரையான காலப்பகுதியில்   "நவ ஜீவன"  மற்றும் "ஹரித ரன்"   ஆகிய வீடமைப்பு திட்டங்களின் கீழ் நிர்மாணிக்கப்பட்டுள்ள 2864 வீடுகளுக்கான முறையான உறுதிப்பத்திரங்களை பெற்றுக்கொடுப்பதற்கு  மலையக புதிய கிராமங்கள்  உட்கட்டமைப்பு  வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சர்  ப. திகாம்பரம் முன்வைத்த  அமைச்சரவைப் பத்திரத்திற்கு  அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது என்றார்.