எதிர்க்­கட்சித் தலை வர் இரா.சம்­பந்தன் நாட் டில் இடம்­பெறும் அசா­தா­ரண நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக குரல் கொடுக்­காது அமை­தி­யாக உள்ளார். எனினும் அவர் அமைதி கலைத்து அர­சாங் கம் மேற்­கொள்ளும் முறை­யற்ற நட­வ­டிக்­கை­க­ளுக்கு எதி­ராக அழுத்தம் கொடுக்க வேண்டும் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் தினேஷ் குண­வர்­தன தெரி­வித்தார். 

கூட்டு எதி­ரட்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்பு நேற்று பொர­ளை­யி­லுள்ள என்.எம்.பெரேரா நிலை­யத்தில் நடை­பெற்­றது. அதில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இதனைத் தெரி­டி­வித்தார். 

அவர் மேலும் குறிப்­பி­டு­கையில்,

அர­சாங்கம் நாட்­டுக்குப் பாதகம் ஏற்­ப­டுத்தும் பல்­வேறு சட்­ட­மூ­லங்­களை நிறை­வேற்­றிக்­கொள்ள முனை­கி­றது. எனினும் அவற்றை முறை­யற்ற வகை­யி­லேயே நிறை­வேற்­றிக்­கொள்­வ­தற்கு எத்­த­ணிப்­ப­தையே அண்­மைக்­கா­லங்­களில் அவ­தா­னிக்க முடிந்­தது.

அத்­துடன் நாட்டில் முப்­பது வரு­டங்கள்  இடம்­பெற்ற யுத்­தத்தை வெற்­றி­கொண்ட இரா­ணு­வத்­தையும் அர­சியல் தலை­வர்­க­ளையும் விசா­ர­ணைக்­குட்­ப­டுத்தும் வேலைத்­திட்­டத்­திற்கு அரசாங்ம் வழி­கோ­லு­கி­றது. இவ்­வா­றான நட­வ­டிக்­கை­யினை வேறு  எந்த நாடு­க­ளிலும் காண­மு­டி­யா­துள்­ளது. அமெ­ரிக்க  ஜனா­தி­பதி மற்றும் இங்­கி­லாந்தின் பிர­தமர் தமது நாட்டு இரா­ணு­வத்­தினர் தவ­று­செய்­கின்ற போதிலும் அது தொடர்பில் வேறு தரப்­பினர் விசா­ரணை நடத்­த­து­வ­தற்கு இட­ம­ளிக்­கப்­போ­வ­தில்லை எனக் குறிப்­பிட்­டுள்­ளனர்.

இதே­வேளை காணா­ம­லாக்­கப்­ப­டு­த­லி­லி­ருந்து ஆட்­களைப் பாது­காப்­ப­தற்­கான சர்­வ­தேச சம­வாய சட்­ட­மூலம் பாரா­ளு­மன்றில் சமர்ப்­பிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் அச்­சட்­ட­மூலம் விவா­தத்­திற்கு எடுக்­காது காலம் தாழ்த்­தப்­பட்­டுள்­ளது. அச்­சட்­ட­மூலம் நாட்டின் பாது­காப்­புக்கும் ஒற்­றை­யாட்­சிக்கும் பாத­க­மாக அமை­ய­வுள்­ளது.

உள்­ளூ­ராட்சி மன்­றங்­களின் பத­விக்­காலம் நிறை­வ­டைந்து இரு வரு­டங்கள் கடந்­துள்ள போதிலும் இன்னும் தேர்தல் நடத்­தப்­ப­ட­வில்லை. மேலும் கிழக்கு, வட­மத்­திய மற்றும் ஊவா மாகா­ண­ச­பை­களின் பத­விக்­காலம் விரைவில் நிறை­வ­டை­வுள்­ளது.

எனினும் அத்­தேர்­த­லையும் நடத்­தாது காலம் தாழ்த்­து­வ­தற்கு அர­சாங்கம் முற்­ப­டலாம். அவ்­வாறு செய்­யு­மாக இருந்தால் அதற்­கெ­தி­ராக நாம் கடு­மை­யான நடவடிக்கைகளை எடுக்க வேண்டி வரும். 

ஆகவே உள்ளூராட்சிமன்றத் தேர்தல் தொடர்பில் உத்தியோகபூர்வ எதிர்க்கட்சித் தலைவராகச் செயற்படும் இரா.சம்பந்தன் அமைதியாக இருக்காது அது தொடர்பில் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.