நிலாவெளி என்றவுடன், அழகிய நிலவொளியுடனான கடற்கரை என்பது எம் அனைவருக்கும் நினைவில் வரும். விருந்தினரை கவர்ந்திருக்கும் தெளிவான நீர், கடல்வாழினங்களின் உயிரியல் பரம்பல் மற்றும் அமைதியான சூழல் போன்ற அம்சங்கள் நாட்டில் அதிகளவானோர் விரும்பும் பகுதியாக இந்தப் பிரதேசத்தைச் திகழச் செய்துள்ளன.

மேல் அல்லது தென் கடற்கரையோரங்களை போலின்றி, கிழக்கு கடற்கரையோரம் பிரத்தியேகமான கவரும் ஆற்றலை கொண்டுள்ளன. இந்தப்பகுதியில் Oceanfront Condos நிர்மாணிக்கப்படவுள்ளன. 

இலங்கையின் முதலாவது கடற்கரைக்கு முகப்பான, சேவை நோக்குடைய, சொகுசான, ஓய்வுநேர தொடர்மனைத்தொடராக அமையவுள்ளது.

Oceanfront Condos இல் தமது நீண்ட கால விடுமுறையை செலவிடுவது என்பது, விருந்தினர்களுக்கு கிழக்கு கடற்கரையின் அழகை அனுபவித்து மகிழும் வாய்ப்பை வழங்கும். நிலாவெளியின் புறா தீவு, இலங்கைக்கு பிரத்தியேகமான கடல் வாழ் உயிரினங்கள், வர்ணமயமான மீன்கள் மற்றும் ஆமைகள் போன்றவற்றை கண்டு களிப்பதற்கான வாய்ப்பை வழங்கும்.

சொந்த நீச்சல் நிலையங்கள் மற்றும் சர்வதேச  PADI அறிவுறுத்தல்களை வழங்குவோரைக் கொண்ட நிலாவெளிப்பகுதி நீச்சல் ஆர்வலர்களுக்கு சிறந்த அனுபவத்தை வழங்கும் பகுதியாக அமைந்துள்ளது.

Oceanfront Condos இல் உரிமையாளர் ஒருவர் கொண்டிருக்கும் அனுகூலங்களில், கடற்கரைக்கு முகப்பான சொத்து ஒன்றை கொண்டிருப்பது அடங்கியுள்ளது. பிரத்தியேக கடலை முகப்பாகக் கொண்ட பல்கனிகள், படுக்கையறைகள் மற்றும் சமையலறைகள் போன்றன விருந்தினர்களுக்கு உள்ளக பகுதியில் இருந்தவாறே இயற்கை அழகை ரசிக்கும் வாய்ப்பை வழங்கும். ஹோட்டல்கள் மற்றும் விடுமுறை தங்குமிடங்கள் போன்றன வழங்காத அனுபவத்தை இந்த Condos வழங்குகின்றன.

உரிமையாளர்கள் தாம் விரும்பியதைப்போன்று குடியிருப்புகளை அமைத்துக்கொள்ள முடியும். தமது சௌகரியத்துக்கமைய குடியிருப்பை அலங்கரித்துக்கொள்ள முடியும். Oceanfront Condos இல் காணப்படும் விசேடத்துவமாக இது அமைந்துள்ளது.

நெரிசலான பகுதியிலிருந்து விடுபட்ட பகுதியாகவும், நிம்மதியாக விடுமுறையை செலவிடக்கூடிய இடமாகவும் அமைந்திருக்கும். மேலும் கிழக்கு கடற்கரையோர அழகை ரசிப்பதற்கு சிறந்த வாய்ப்பை வழங்கும் பகுதியாகவும் அமையும். மேலதிக விவரங்களுக்கு oceanfrontnilaveli.com எனும் இணையத்தளத்தை பார்வையிடவும்.