அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக யானைக்குட்டியை வைத்திருந்த குற்றச்சாட்டிற்கு எதிராக உடுவே தம்மாலோக்க தேரருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணை எதிர்வரும் ஒக்டோபர் மாதம்  24 ஆம் திகதி என இன்று தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ள நிலையில், இவ் வழக்கு இன்று கொழும்பு மேன்முறையீட்டு நீதி மன்ற நீதிபதி சம்பத் விஜேரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுக்கப்பட்டது.

இதன்போது, வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும் திகதியை நீதிமன்றம் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.