அனுராதபுரம் - உபுல்தெனிய பகுதியில் இடம்பெற்ற மோட்டார் சைக்கிள் விபத்தில் இராணுவ வீரர் ஒருவரும் பொலிஸ் அதிகாரி ஒருவரும் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

இரு மோட்டார் சைக்கிள்கள்  நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதிலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.

பொலிஸார் விபத்து தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.