புதிய அர­சி­ய­ல­மைப்பில் தேர்தல் முறை மாற்­றத்­திற்கே முன்­னு­ரிமை வழங்­கப்­படும் - ஜனாதிபதி

Published By: Priyatharshan

12 Jul, 2017 | 12:05 PM
image

புதிய அர­சி­ய­ல­மைப்பில் தேர்தல் முறைமை மாற்­றப்­பட வேண்டும் என  மக்கள் எதிர்­பார்­கின்­றனர். எனவே புதிய அர­சி­ய­ல­மைப்பில் தேர்தல் முறை மாற்­றத்­திற்கு முன்­னு­ரிமை வழங்­கப்­படும் என்று ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன தெரி­வித்­துள்ளார்.   

தெஹி­அத்த கண்­டிய மகா­வலி  சாலிகா மண்­ட­பத்தில் நேற்று இடம்­பெற்ற நிகழ்­வொன்றில் கலந்து கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்ளார்.  

அவர்  அங்கு மேலும் தெரி­விக்­கையில்,

புதிய அர­சி­ய­ல­மைப்­பொன்றை உரு­வாக்­கு­வ­தற்­காக பாரா­ளு­மன்றம் அர­சி­ய­ல­மைப்பு நிர்­ணய  சபை­யாக மாற்­றப்­பட்­டுள்­ளது. அதில் பல உப குழுக்­களும் உள்­ளன. அவர்கள் தற்­போதும் புதிய அர­சி­ய­ல­மைப்­பிற்­கான  அறிக்­கை­களை தயா­ரிக்கும் பணி­களை முன்­னெ­டுத்து வரு­கின்­றார்கள்.

 அந்த குழுக்­களின் அறிக்­கை­களை தொகுத்து அர­சாங்கம் தனி­யான ஒரு அறிக்­கையை தயார் செய்யும். அதன் பின்னர் அந்த அறிக்கை பாரா­ளு­மன்­றத்தில் சமர்ப்­பிக்­கப்­படும். அதன் பின்னர் அதற்கு ஆத­ரவு,எதிர்ப்பு, திருத்­தங்கள் மற்றும் பரிந்­து­ரைகள் உள்­ளிட்ட விட­யங்கள் குறித்து பேசப்­படும்.

அதன் பின்­னர்தான் புதிய அர­சி­ய­ல­மைப்பின் மொத்த வடிவம் தயார் செய்­யப்­படும். அதனால் என்­னி­டத்­திலோ அல்­லது அர­சாங்­கத்தில் உள்­ள­வர்­க­ளி­டத்­திலோ தற்­போது வரையில் புதிய அர­சி­ய­ல­மைப்பு தொடர்­பி­லான ஒரு வித­மான பத்­தி­ரங்­களும் இல்லை.

அவ்­வாறு உரு­வாக்­கப்­படும் புதிய அர­சி­ய­ல­மைப்பில்  ஒற்­றை­யாட்­சியில் எந்­த­வித மாற்­றமும் ஏற்­ப­டுத்­தப்­ப­டாது. பெளத்த மதத்தின் முன்­னு­ரி­மைக்கும் எது­வித பங்­கமும் ஏற்­ப­டுத்­தப்­ப­டாது. குறிப்­பாக பெளத்த மதம் தொடர்­பி­லான அத்­தி­யா­யங்­களை மாற்றம் செய்­ய­மாட்டோம்.

எவ்­வா­றா­யினும் அர­சி­ய­ல­மைப்பு மாற்றம் தொடர்பில் நல்­லாட்சி அர­சாங்­கத்­திற்கும் மக்­க­ளுக்கும் எதிர்­பார்ப்­புக்கள் உள்ளன. மக்கள் தமது ஒவ்வொரு தொகுதிக்கும் தனியான பிரதிநிதிகள் தேவைப்படுகின்றனர் என கருதுகின்றார்கள். 

 எனவே புதிய அரசியலமைப்பில் புதிய தேர்தல் முறைக்கு முன்னுரிமை கொடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச...

2024-04-19 17:53:19
news-image

மெய்வல்லுநர் ஜாம்பவான் நாகலிங்கம் எதிர்வீரசிங்கம் காலமானார்

2024-04-19 17:53:07
news-image

கனடாவில் 6 இலங்கையர்களைக் கொலை செய்த...

2024-04-19 17:53:58
news-image

தெவுந்தர கடற்கரையில் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை பரிசோதனைக்கு...

2024-04-19 17:15:25
news-image

நுவரெலியாவில் தவறான முடிவெடுத்து உயிரை மாய்த்த...

2024-04-19 16:14:46
news-image

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வருகை தரும்...

2024-04-19 16:15:27
news-image

மே தின கூட்டத்தில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு...

2024-04-19 16:10:31
news-image

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி...

2024-04-19 15:55:22