வாஷிங்டன் இலங்கை தூத­ர­கத்தில் பணி­பு­ரிந்த பிரி­கே­டியர் தலை­ம­றைவு

Published By: Raam

12 Jul, 2017 | 01:23 PM
image

அமெ­ரிக்­கவின் வாஷிங்டன் நகரில் அமைந்­துள்ள இலங்கை தூத­ர­கத்தில் பாது­காப்பு ஆலோ­ச­க­ராக பணி­பு­ரிந்த பிரி­கே­டியர்  ஒருவர் தலை­ம­றை­வா­கி­யுள்ளார். சேவை காலம் முடி­வ­டைந்­துள்ள நிலையில் இரா­ணுவ தலை­மை­யகம் அவரை  நாடு திரும்­பு­மாறு அழைத்­ துள்ள நிலை­யி­லேயே அவர் தலை­ம­றை­வா­கி­யுள்ளார். 

இத­னை­ய­டுத்து அவரை கைது செய்­யு­மாறு சர்­வ­தேச பொலி­சா­ருக்கு அறி­விக்­கப்­பட்­டுள்­ள­தாக இரா­ணுவ தலை­மை­யகம் தெரி­வித்­துள்­ளது. 

கஜபா படை­ய­ணியில் இணைக்­கப்­பட்­டி­ருந்த பிரி­கே­டியர் ஜயந்த ரத்­நா­யக்க என்­ப­வரே இவ்­வாறு தலை­ம­றை­வா­கி­யுள்ளார். முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஆட்சி காலத்தில் 2014 ஆம் ஆண்டு டிசெம்பர் மாதம் பாது­காப்பு ஆலோ­க­ராக நிய­மிக்­கப்­பட்டு வொஸிங்­டனில் அமைந்­துள்ள இலங்கை தூத­ர­கத்­திற்கு பணிக்­காக அனுப்­பப்­பட்டார். 

2016 ஆம் ஆண்டில் அவ­ரது சேவை காலம் நிறை­வ­டைந்து நாடு திரும்ப வேண்­டிய நிலையில் அவர் இது­வ­ரையில் இலங்­கைக்கு வர­வில்லை. வொஸிங்டன் நகரில் அமைந்­துள்ள இலங்கை தூத­ர­கத்தின் புதிய பாது­காப்பு ஆலோ­ச­க­ராக கடற்­படை அதி­காரி ஒரு­வ­ருக்கு நிய­மனம் வழங்­கப்­பட்­டுள்­ளது. 

தனது பதவி காலம் முடி­வ­டைந்தும் இது­வ­ரையில் பிரி­கே­டியர் ஜயந்த ரத்­நா­யக்க இரா­ணு­வத்தில் பணிக்கு திரும்­பாத நிலையில் , அவர் இரா­ணு­வத்தில் இருந்து தப்­பிச்­சென்­ற­வ­ராக கரு­தப்­பட்டு சட்­ட­ந­ட­வ­டிக்கை எடுக்­கப்­பட உள்­ள­தாக இரா­ணுவ பேச்­சாளர் பிரி­கே­டியர் ரொஷான் சென­வி­ரட்ண தெரி­வித்தார். 

பிரி­கே­டியர் ஜயந்த ரத்­நா­யக்க இரா­ஜ­தந்­திர கட­வுச்­சீட்­டுடன் தலை­ம­றை­வா­கி­யுள்ள நிலையில் அவரை உட­ன­டி­யாக கைது செய்­யு­மாறு சர்­வ­தேச பொலி­சா­ருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த பல வருடகாலமாக இராணுவத்திற்கு கிடைத்து வந்த இராஜதந்திர பாதுகாப்பு ஆலோசகர் பதவி இனி கிடைக்காமல் போகும் எனவும் பேச்சாளர் மேலும் தெரிவித்தார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இலங்கை கிரிக்கெட்டை உலகில் தலைசிறந்ததாக மீண்டும்...

2024-03-29 20:09:53
news-image

தண்டனைச்சட்டக்கோவையின் 363, 364 ஆம் பிரிவுகளைத்...

2024-03-29 19:35:09
news-image

பொதுத் தேர்தல் இடம்பெற்றால் எந்த கட்சிக்கும்...

2024-03-29 18:29:33
news-image

ஞானசார தேரர் திடீரென சிறைச்சாலை வைத்தியசாலையில்...

2024-03-29 18:07:00
news-image

மார்ச்சில் பணவீக்கம் 0.9 சதவீதமாக சடுதியாக...

2024-03-29 18:01:49
news-image

யாழ். போதனா வைத்தியசாலைக்கான எரியூட்டியை அமைச்சர்...

2024-03-29 17:55:07
news-image

பொதுஜன பெரமுனவின் மாவட்ட மகா சம்மேளனம்...

2024-03-29 17:15:52
news-image

இனப்பிரச்சினைக்கு 13 வது திருத்தத்தின் அடிப்படையில்...

2024-03-29 16:52:41
news-image

சிவனொளிபாத மலையிலிருந்து பள்ளத்தில் விழுந்த சுற்றுலா...

2024-03-29 17:02:49
news-image

சந்தேகத்துக்கிடமான செயற்பாடுகள் காணப்பட்டால் உடனடியாக பொலிஸாருக்கு...

2024-03-29 18:20:48
news-image

அநுராதபுரம் திறந்தவெளி சிறைச்சாலையில் இரு கைதிகள்...

2024-03-29 15:55:47
news-image

அதிகார பகிர்வினால் மாத்திரமே பொருளாதார வளர்ச்சி...

2024-03-29 15:40:08