வேற்றுக்கிரக வாசிகளின் நடமாட்டம் மற்றும் வேற்றுக் கிரக வாசிகளின் கால் தடயங்களை கண்டு கிரமவாசிகள் வீட்டுக்குள் முடங்கிக் கிடந்த சம்பவமொன்று கர்நாடக மாநிலம் அண்டூர் கிராமத்தில் இடம்பெற்றுள்ளது.

குறித்த கிராமவாசிகள் வேற்றுக்கிரக வாசிகளின் நடமாட்டத்தை கண்டு இரண்டு, மூன்று நாட்கள் இவ்வாறு தமது வீடுகளுக்குள் முடங்கிப் போயிருந்துள்ளனர்.

தமக்கு நேர்ந்த சம்பவம் தொடர்பில் அண்டூர் கிராம வாசிகள் தெரிவிக்கையில், 

திறந்த வெளிகளில் சுமார் 20-30 வரையிலான மிக பெரிய கால் தடயங்களை தாம் கண்டதாகவும் இது வரை இது போன்ற பெரிய கால் தடயங்களை தாம் கண்டதில்லை எனவும் மிக பெரிய உயிரினம் மூச்சு விடுவதைப்போன்ற பயங்கரமான சத்தம் கேட்பதாகவும் அது வேற்றுக்கிரகவாசியாக இருக்கலாமெனவும் அக் கிராம வாசிகள் தெரிவித்தனர்.

இந்நிலையில் குறித்த கிராமவாசிகளின் அச்சத்தைப் போக்குவதற்காக வனத்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுவதாகவும் கிராமவாசிகளால் அடையாளம் காணப்பட்ட கால் தடம் எந்த விலங்கினுடைய கால் தடங்களோடும் ஒத்துப் போகவில்லையெனவும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ள வனத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.