இலங்கை இராணுவத்தின் 22ஆவது இராணுவத் தளபதியாக நியமிக்கப்பட்ட லெப்டினன் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்க இன்று ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்தார்.

இராணுவத் தளபதியாக பதவியேற்றதன் பின்னர் அரச தலைவரை சந்திக்கும் சம்பிரதாயபூர்வ நிகழ்வு இதுவாகும். அதனைக் குறிக்கும் முகமாக இராணுவத் தளபதி நினைவுச் சின்னமொன்றை ஜனாதிபதிக்கு  வழங்கி வைத்தார்.