மேல் மாகாணத்தில் டெங்கு பரவும் வகையில் காணப்படும் கைவிடப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு வரிவிதிப்பு செய்ய அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

குறித்த காணியின் பெறுமதியில் 2 சதவீதம் வரியாக அறவிட தீர்மானிக்கப்பட்டுள்ளது. அடுத்த வாரத்தில் இருந்து இந்த திட்டம் நடைமுறைக்கு வருகின்றது.
நாட்டில் டெங்கு மிகவும் வேகமாக பரவிவரும் நிலையில் அதிகளவிலான டெங்கு பரவல் மேல் மாகாணத்தில் பதிவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் மேல் மாகாணத்தில் வெறுமையாக சுத்தம் செய்யாது கைவிடப்பட்டுள்ள காணிகள் நீர் தேங்கியுள்ள நிலையிலும் சூழல் அசுத்தமாக உள்ளதை அடுத்தும் டெங்கு நுளம்புகள் பரவும் சூழல் காணப்படுவதாக அவதானிக்கப்பட்டுள்ளதாக மேல்மாகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரிய குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே மேல் மகாண முதலமைச்சர் இசுறு தேவப்பிரியவின் தீர்மானத்துக்கு அமைய புதிய வரிவிதிப்பு அமுல்படுத்தப்படவுள்ளது. இது குறித்து அவர் கூறுகையில்,
மேல் மாகாணத்தில் அதிக டெங்கு நோய் பரவ அசுத்தமான சூழலே காரணமாகும். இது தொடர்பில் ஆராய்ந்த போது மேல் மாகாணத்தில் கைவிடப்பட்டுள்ள காணிகளில் இவ்வாறான டெங்கு நுளம்பு பரவல் அதிகரித்துள்ளது.
எனவே கைவிடப்பட்டுள்ள காணிகளின் உரிமையாளர்கள் உடனடியாக தமது காணிகளை சுத்தம் செய்ய வேண்டும். இல்லாவிடின் காணியின் உரிமையாளர்களுக்கு எதிராக புதிய வரி அறவீடுகள் முன்னெடுக்கப்படவுள்ளது. அந்த வகையில் இவ்வாறு காணிகளை கைவிட்ட உரிமையாளர்களை ஒரு வார காலத்தில் தமது காணிகளை சுத்தம் செய்து பாதுகாப்பான சூழலை உருவாக்க வேண்டும். இல்லையேல் உரிமையாளர்களின் காணிகளின் பெறுமதியில் இரண்டு வீதத்திற்கு உலடன்கிய வகையிலான வரி அறவிடப்படும் . அதேபோல் மாநகர சபை சுத்தப்படுத்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதுடன் அதற்கான வருமானத்தையும் அறவிடும். அடுத்த வாரத்தில் இருந்து இந்த திட்டம் முன்னெடுக்கப்படும் எனவா அவர் குறிப்பிட்டார்.