"எவ­ரு­டைய மன்­னிப்பும் எனக்கு அவ­சி­ய­மில்லை"

Published By: Robert

11 Jul, 2017 | 09:24 AM
image

யுத்த குற்­றச்­சாட்­டுக்­களில் ராஜபக் ஷவி­னரை மன்­னிக்க வேண்டும் என ஒரு­ சிலர் கூறு­கின்­றனர். எவ­ரதும் அநா­வ­சிய மன்­னிப்­புகள் எனக்கு அவ­சியம் இல்லை. எனக்கு நியா­யமே அவ­சியம் என முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­தா­பய ராஜபக் ஷ தெரி­வித்தார். 

Image result for கோத்­தா­பய ராஜபக் ஷ virakesari

எமக்கு எதி­ராக தனிப்­பட்ட அர­சியல் பழி­வாங்கல் இடம்­பெற்று வரு­கின்­றது. நாம் செய்­யாத குற்­றங்­களில் எம்மை சிக்க வைக்க முயற்­சித்து வரு­கின்­றனர்.  இந்த அர­சாங்­கதின் உண்­மை­முகம் இப்­போது வெளிப்­பட்­டுள்­ளது  எனவும் அவர் குறிப்­பிட்டார். 

முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜ­பக்ஷ பாரிய நிதி­மோ­சடி  குற்­றச்­சாட்­டு­களை விசா­ரணை செய்யும் ஜனா­தி­பதி ஆணைக்­குழு முன்­னி­லையில் நேற்று காலை ஆஜ­ரா­கி­யி­ருந்தார். காங்­கே­சன்­துறை சீமெந்து தொழிற்­சா­லையின் இரும்­பு­களை துண்­டு­க­ளாக்கி விற்­பனை செய்­வ­தற்கு பாது­காப்பு அமைச்சின் ஊடாக அனு­மதி வழங்­கிய சம்­பவம் தொடர்­பி­லான  குற்­றச்­சாட்டு  குறித்த  விசா­ர­ணை­க­ளுக்­காக அவர் அழைக்­கப்­பட்­டி­ருந்தார். சுமார் நான்கு மணி­நேர விசா­ர­ணை­களின் பின்னர் ஊட­கங்­க­ளுக்கு கருத்து தெரி­விக்கும் போதே அவர் மேற்­கண்­ட­வாறு குறிப்­பிட்டார். 

அவர் மேலும் கூறி­ய­தா­வது, 

கடந்த காலத்தில் இடம்­பெற்­ற­தாக கூறப்­படும் யுத்த குற்­றங்­களில் இருந்து ராஜபக் ஷ குடும்­பத்­தி­ன­ருக்கு மன்­னிப்பு கொடுக்க வேண்டும் என சிலர் அநா­வ­சிய கருத்­து­களை முன்­வைத்து வரு­கின்­றனர். இவர்­களின் கருத்­துக்­களின் மூல­மாக நாம் குற்­ற­வா­ளிகள் என கூற­வ­ரு­கின்­றமை தெரி­கின்­றது. எனினும் எனக்கு யாரு­டைய மனிப்பும் அவ­சியம் இல்லை. எனக்கு நியா­ய­மான தீர்வே வேண்டும். நான் செய்­யாத குற்­றத்­திற்­காக என்னை குற்­ற­வா­ளி­யென தெரி­வித்து வரு­கின்­றனர்.  இந்த நாட்­டிற்­காக நான் மிகப்­பெ­ரிய சேவை­யினை செய்­துள்ளேன். இந்த நாட்டின் அமை­தியை, சுதந்­தி­ரத்தை நாம் உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளோம். கடந்த காலத்தில் எவரும் செய்­யாத சேவை­யினை நாம் எமது நாடு மக்­க­ளுக்­காக செய்­துள்ளோம். எனினும் இன்று நாமே குற்­ற­வா­ளி­யென இந்த அர­சாங்கம் கூறி வரு­கின்­றது, 

நான் ஒரு அரச அதி­கா­ரி­யாக சேவை செய்­துள்ளேன். நான் அரச அதி­கா­ரி­யாக செயற்­பட்ட காலத்தில் எந்­த­வொரு சொத்­தையும் கைப்­பற்­றி­யுள்­ளேனா? எமது பெயரில் எந்­த­வொரு தேயிலைத் தோட்­டமும் இல்லை, ஒரு இறப்பர் தோட்­டமும் எனது பெயரில் இல்லை. எந்­த­வொரு சட்­ட­வி­ரோத சொத்­துக்­களும் இல்லை. ஹோட்­டல்கள் எவை­யேனும் எனது பெயரில் உள்­ள­னவா? எந்­த­வொரு நிறு­வ­னத்தின் பங்கும் எனது பெயரில் மாற்­றப்­பட்­டுள்­ளதா?  ஊழல் வாதிகள் என்றால் இவ்­வாறு ஏதேனும் இருக்க வேண்டும் அல்­லவா.  எமது பெயரில் கோடிக்­க­ணக்கில் சொத்­துகள் இருக்க வேண்டும், பொது­மக்­களின் சொத்­துக்கள் எம்­மிடம் இருக்க வேண்டும். இரா­ணுவ சொத்­துக்கள் எமக்கு இருக்க வேண்டும். அவ்­வாறு இல்­லாது நிதி­மோ­சடி குற்­றச்­சாட்டு என்­மீது எவ்­வாறு சுமத்­தப்­பட்­டுள்­ளது என எனக்கு தெரி­ய­வில்லை. ஆனால் எனது பெயரில் இவ்­வாறு எந்­த­வொரு குற்­றச்­சாட்டும் இல்­லாது என்னை ஏன் குற்­ற­வா­ளி­யாக்க பார்க்­கின்­றனர். எனக்கு நியா­ய­மான தீர்வு அவ­சி­ய­மா­கின்­றது. அதையே நான் எதிர்­பார்க்­கின்றேன் மாறாக எவ­ரதும் மன்­னிப்பை நான் எதிர்­பார்க்­க­வில்லை. 

இன்று எமக்கு எதி­ராக தனிப்­பட்ட அர­சியல் பழி­வாங்கல் இடம்­பெற்று வரு­கின்­றது. நாம் செய்யாத குற்றங்களில் எம்மை சிக்க வைக்க முயற்சித்து வருகின்றனர். என்னை கைதுசெய்யவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவை நாடுகடத்தவும் இவர்கள் திட்டம் தீட்டியுள்ளனர் என அவர்களின் மூலமாகவே தகவல் கிடைத்துள்ளது. ஆகவே இந்த அரசாங்கத்தின் உண்மைமுகம் இப்போது வெளிப்பட்டுள்ளது  என்றார். 

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உயிர்த்த ஞாயிறுதினத்தாக்குதல் விவகாரம் : பேராயர்...

2024-04-20 08:50:08
news-image

இன்றைய வானிலை

2024-04-20 06:50:11
news-image

மக்கள் விடுதலை முன்னணியினால் அன்று செய்த...

2024-04-20 01:44:10
news-image

சு.க. ஆதரவாளர்கள் ஐக்கிய மக்கள் சக்தியுடன்...

2024-04-20 00:07:16
news-image

ஈரானிய ஜனாதிபதியின் விஜயம் தொடர்பில் எதிர்ப்பை...

2024-04-20 00:05:28
news-image

துன்பப்படும் மக்களுக்கு பக்கபலத்தை வழங்கிய சிறந்ததொரு...

2024-04-19 23:45:02
news-image

கடற்படை வீரர்கள் இருவர் உட்பட 4...

2024-04-19 22:16:12
news-image

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள...

2024-04-19 20:36:49
news-image

சர்வோதய ஸ்தாபகர் ஏ.டி. ஆரியரத்னவின் பூதவுடலுக்கு...

2024-04-19 19:21:27
news-image

பாலித தெவரப்பெருமவின் பூதவுடலுக்கு ஜனாதிபதி இறுதி...

2024-04-19 18:46:10
news-image

கோழி இறைச்சியின் விலை குறைப்பு!

2024-04-19 18:33:17
news-image

பொலிஸாரிடமிருந்து தப்பிச் செல்ல முயன்ற நபர்...

2024-04-19 18:10:41