களுத்துறை மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை மறுதினம் 16 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக, தேசிய நீர் வழங்கல் வடிகானமைப்புச் சபை தெரிவித்துள்ளது. 

பராமரிப்புப் பணிகளின் நிமித்தம்  காலை 08.00 மணி முதல் இரவு 12.00 மணி வரை நீர்வெட்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. 

குறித்த நீர்வெட்டு வாத்துவ, வஸ்கடுவை, பொதுபிடிய, மொரோன்துடுவ, கட்டுகுறுந்த, நாகொடை, பெந்தோட்டை, பயாகலை மற்றும் வடக்கு, தெற்கு களுத்துறை ஆகிய பகுதிகளிலேயே முன்னெடுக்கப்படவுள்ளதாகவும், போம்புவல, மஹ்கொன, களுவாமோதர, மொரகல்ல, தர்கா நகர், அளுத்கம மற்றும் பிலம்நாவத்தை ஆகிய பகுதிகளிலும் இக் காலப் பகுதியில் நீர் விநியோகம் தடைப்படவுள்ளன என தெரிவிக்கப்படுகின்றது.