பாகிஸ்தானில் மூன்று ஆண்டுகளாக யுடியூப்பிற்கு (YouTube) இருந்துவந்த தடையை நீக்குவதாக அந்நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது.

உலக அளவில் காணொளிகளைப் பகிரும் முன்னணி இணையத்தளமான யுடியூப் (YouTube) இஸ்லாத்தை இழிவுபடுத்தக் கூடிய காணொளியை பகிர்ந்ததாகக் கூறி யுடியூப் (YouTube) இணையத்தளம் பாகிஸ்தானுக்குள் தடை செய்யப்பட்டிருந்தது.

யுடியூப்பை தற்போது நிர்வகிக்கும் கூகுள் நிறுவனம் பாகிஸ்தானுக்கான பிரத்தியேக யுடியூப் (YouTube) இணையத்தளத்தை வடிவமைத்து செயற்பட வைத்திருப்பதால், யூ டியுப் (YouTube) இணையத்தளம் மீதான தடையை  பாகிஸ்தானின் தொலைத்தொடர்பு அமைச்சு நீக்கியுள்ளது.