திருமணம் முடிந்து முதலிரவு அன்றே மாப்பிள்ளை காணாமல் போன சம்பவம் இந்தியாவில் நெல்லை மாவட்டத்தில் இடம்பெற்றுள்ளது.

திருநெல்வேலி மாவட்டம் விகேபுரம் அருகே செட்டிமேடு பகுதியை சேர்ந்த ஜோசப் என்பவருக்கும், தாட்டம்பட்டியை சேர்ந்த பெண் ஒருவருக்கும் அண்மையில் இருவீட்டார் சம்மதத்தின் பேரில் திருமணம் நடந்ததுள்ளது. 

திருமணம் நடந்த அன்று மாலை மாப்பிள்ளை வீட்டில் வரவேற்பு நிகழ்ச்சி நடந்ததுள்ளது.திருமண நிகழ்வின் அனைத்து சடங்குகளும் முடிந்த நிலையில் முதல் இரவுக்காக தயாரான நிலையில் மாப்பிள்ளையைத் தேடிய போதே அவர் மாயமானது தெரிய வந்துள்ளது.

இதனால் அதிர்ச்சி அடைந்த மணப்பெண் வீட்டார் தொடர்ந்து பல இடங்களில் மாப்பிளையைத் தேடியுள்ளனர். ஆனால் மாப்பிள்ளை இறுதிவரையில் கிடைக்கவில்லை. 

இதுகுறித்து மாப்பிள்ளையின் தந்தை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார். இதை தொடர்ந்து மாயமான மாப்பிள்ளையை பொலிஸார்  தேடி வருகின்றன. குறித்த சம்பவம் அப்பகுதியில்  பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.